ரஸ்தாளி, கற்பூரவள்ளி சிறப்புகள்.. வாழைப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்கலாம்.. நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா
சென்னை: வாழைப்பழங்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? பழங்களை நாம் தினமும் எத்தனை சாப்பிட வேண்டும் தெரியுமா? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழம் என்ன? யார் யாரெல்லாம் வாழைப்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்க்கலாம.
வாழைப்பழங்கள்
முக்கனிகளில் ஒன்றாக உள்ள வாழைப்பழங்களில் பல வகை உண்டு.. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம் இப்படி வெரைட்டியான பழங்கள் நம்முடைய தமிழகத்திலேயே விளைகின்றன.. எனவேதான் வாழைப்பழங்கள் நமக்கு, மலிவு விலையில், எல்லா காலத்திலும் கிடைக்கின்றன.

பொட்டாசியம், வைட்டமின் A, B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை வாழைப்பழத்தில் உள்ளன.. இந்த சத்துக்கள் எலும்புகள், தசைகள் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 % உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாம். ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைப்பதுடன், ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்ற உதவுகிறது. அதேபோல, பச்சை வாழையை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு,உப்பு, மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். ஆனால், காசநோய், ஆஸ்துமா, வாதநோய் இருந்தால் பச்சை வாழையை தவிர்க்கலாம்.
கற்பூரவள்ளியை எடுத்துக் கொண்டால், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B6, நார்ச்சத்துக்கள் உள்ளதால், உள்ளன. கால்சியம் அதிகம் என்பதால் எலும்புகளுக்கு உறுதியை தரும். மூளை வளர்ச்சிக்கு நல்லது. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு புண்களை ஆற்ற உதவுகிறது.பூவன் வாழை அஜீரணத்தை போக்கக்கூடியது. ரஸ்தாளிபழம் வயிறு நிரம்பிய உணர்வை தரும்,.
யாரெல்லாம் தவிர்க்கலாம்
ஆனால், வாழைப்பழங்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிக பழங்களை சாப்பிடும்போது, புரதம், கொழுப்பு, கால்சியம், வைட்டமின் D, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையலாம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மட்டுமே வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதிலுள்ள சில அமிலங்கள் மூளை செயல்பாட்டை மழுங்கடித்துவிடும். இது தூக்கத்தையும் கெடுத்துவிடும். குடல் கோளாறு, வாயு தொந்தரவு வரலாம். இந்த பழத்திலிருக்கும் வைட்டமின் B6 நரம்புகளை பாதிக்கலாம. மதியம் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாழைப்பழங்களை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள்
கார்போஹைட்ரேட்டுகளை கொண்ட வாழைப்பழங்கள், சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்காமல் சர்க்கரை அளவை கன்ட்ரோலில் வைத்திருக்க செய்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானம் சீராகிறது..
சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழங்கள் நல்லது.. இதில், சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக உள்ளதால் செரிமானத்தை தாமதப்படுத்துகிறது.. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள், பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம். செவ்வாழையும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஆனால், ஒரு சிறிய வாழையை மட்டுமே சாப்பிட வேண்டும்.
கண் நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், அதிக பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துகள் வாயு பிரச்சனை மற்றும் வயிறு வீக்கத்தை உண்டுபண்ணிவிடும். வைட்டமின் B6 உள்ளதால், நரம்புகளும் பாதிக்கப்படலாம். ரத்தத்தில் பொட்டாசியம் அதிகமாக உஇருந்தாலும் அலர்ஜி போன்ற உபாதைகள் வரலாம்.. ஸ்டார்ச் அதிகமுள்ளதால் பல சொத்தைகளும் வரலாம்.












Click it and Unblock the Notifications