பீன்ஸில் அத்தனையும் நன்மை.. பச்சை பீன்ஸை கர்ப்பிணி, சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? புரோட்டீன் பீன்ஸ்
சென்னை: பச்சை காய்கறிகளில் தவிர்க்க முடியாதது பீன்ஸ் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? உடல் எடை குறைப்பவர்களின் முக்கிய சாய்ஸாக பீன்ஸ் இருக்க என்ன காரணம்? பீன்ஸ் சாப்பிட்டால் உண்மையிலேயே வெயிட் குறைக்க முடியுமா? யார் யாருக்கெல்லாம் பீன்ஸ் நல்லது? பீன்ஸில் உள்ள சத்துக்கள் என்னென்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பீன்ஸில் பல வகை உண்டு.. கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ், டபுள் பீன்ஸ் போன்று பலவகைகள் இருந்ததாலும் அனைத்திலும் பெஸ்ட் பச்சை பீன்ஸ்தான். ஏனென்றால், நார்ச்சத்துக்களின் மொத்தமும் பீன்ஸில்தான் அடங்கியிருக்கிறது..

அளவுக்கு அதிகமான நார்ச்சத்து
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம் என பல்வேறு சத்துக்களின் களஞ்சியம்தான் இந்த பீன்ஸ்.
உடல் எடை குறைப்பவர்கள் பீன்ஸ் தேர்ந்தெடுக்க காரணம், இதிலுள்ள நார்ச்சத்துக்களே.. அதுமட்டுமல்ல, கொழுப்புச்சத்தும் இதில் குறைவாகும்.. புரோட்டீன்களும் தேவையான விகிதத்தில் உள்ளதால் வெயிட் லாஸ் செய்வோருக்கு கை கொடுத்து உதவுகிறது பீன்ஸ்.. அதாவது, 100 கிராம் பீன்ஸில் 9 சதவீதத்துக்கு நார்ச்சத்து மட்டுமே இருக்கிறதாம்..
தசைகள் வளர்ச்சி
எனவே, பீன்ஸை உணவில் சேர்த்து கொள்ளும்போது, பசி கட்டுக்குள் இருக்கும், இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது.. நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமான தன்மையும் பெருகும்.. இது தசைகளின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும். கொழுப்பும் குறைவாக உள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் பெருகுவதை தடுக்கிறது. இதனால் இதய நோய்களின் அபாயமும் தடுக்கப்படுகிறது.
குழந்தைகளின் பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு, பீன்ஸில் உள்ள சிலிகான் என்ற கனிமச்சத்து உதவுகிறது.. சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பீன்ஸின் பீட்டா கரோட்டீன் துணைநிற்கிறது. வலுவற்ற தலைமுடி உள்ளவர்களுக்கு பீன்ஸ் கை கொடுத்து உதவும்.
வளர்சிதை மாற்றம்
ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமாகிறது.
கிட்னியில் கல் உள்ளவர்கள், அல்லது கிட்னியில் கல் சேரக்கூடாது என்று விரும்புபவர்களுக்கு பீன்ஸ் ஒரு வரப்பிரசாதம். பீன்ஸ் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.. ஏனென்றால், இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், ரத்தத்தில் சர்க்கரை சேர்வதை தடுத்து நிறுத்துகிறது.
கர்ப்பிணிகள், சிசு
கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பீன்ஸ் சாப்பிட வேண்டும்.. காரணம், பீன்ஸிலிருக்கும் போலேட் என்ற கருவில் வளரும் சிசுவிற்கு அவசியமான வைட்டமின் அடங்கியுள்ளால் நிறைந்திருக்கிறது.. அதேபோல, மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பீன்ஸ் சாப்பிட வேண்டும். ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்த பீன்ஸில் கேன்சரை குணப்படுத்தக்கூடிய கூறுகள் இருக்கிறதாம்.
மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க பீன்ஸ் உதவுகிறது. பைரிடாக்சின் என்ற வைட்டமின் B6, தையமின் B1, வைட்டமின் C போன்றவை பீன்ஸில் நிறைந்துள்ளது.
பார்வை குறைபாடு
பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு கண்கள் சம்பந்தமான கோளாறுகள் அண்டுவதில்லை. ஏனென்றால், பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பீன்ஸ் செரிமான சக்தியை அதிகரிக்கக்கூடியது.. வாயுத்தொல்லையை போக்கக்கூடியது.. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது.












Click it and Unblock the Notifications