கோடையில் தினமும் திராட்சைசாறு குடிப்பதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்
சென்னை: இயற்கை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று தான் பழ வகைகள். பெரும்பாலும் அனைத்து வித பழங்களிலும் ஒவ்வொரு தனித்துவமான நன்மைகளும், பல நோய்களை எதிர்க்கக்கூடிய சக்தியும், உடல் ஆரோக்கியத்திற்கும், இனிப்பு, புளிப்பு போன்ற சுவை கொண்ட பழங்கள் ஏராளம் உண்டு. அதில் ஒன்று இந்த திராட்சை பழம் ஆகும். இதில் கருஞ்சிவப்பு, ஊதா, வெளிர்பச்சை, வெள்ளை, சிகப்பு, கருப்பு, மற்றும் பன்னீர் திராட்சை என்று பல நிறத்திலும், பல வகையான இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளில் உண்டு. நிறத்தில் பல வகைகள் இருந்தாலும், அதன் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எல்லா வகையான திராட்சைப்பழத்திலும் வைட்டமின் ஏ அதிக அளவிலும், வைட்டமின் பி, பி2, பி3, பி6, பி12, சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரும்புசத்து, பாஸ்பர்ஸ், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், பொட்டாசியம், போன்ற உலோகசத்துக்களும் ஏராளமாக உள்ளது. இதை தவிர கார்போஹைட்ரெட், பெக்டின் மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலங்களும் உள்ளன. அனைத்து வகை திராட்சைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது. இவ்வளவு சத்து நிறைந்த திராட்சை பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இதில் உள்ள மருத்துவ பலன்கள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இதயத்திற்கு ஏற்ற பழம்:திராட்சையில் அதிகப்படியான, வேதியியல் மூலம் மற்றும் பாலித்தினால் சொல்லப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதய தசைகளை வலிமையாக்குவதோடு, இதயத்தில் அடைப்பு உண்டாகக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து, சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே தினமும் திராட்சை பழ சாறு குடித்துவந்தால், இதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டத்திற்கு தேவையான பொட்டாசியம் இதில் இருப்பதால், இரத்த நாளங்கள் சரியான முறையில் சுருங்கி, விரிய பெரிதும் உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் 50-100 gm பழம் அல்லது ஜூஸ் குடிக்கலாம். இதனால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
புற்று நோய் வராமல் தடுக்க: திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால், புற்றுநோய் (anti-cancer) எதிர்ப்புச் சக்தி, கான்செர் செல்களை நேரடியாக அழிக்கக்கூடிய ஆற்றல் ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) என்ற மூல பொருள் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது. ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) என்ற மூல பொருள் இப்பழத்தின் விதையில் இருப்பதால், கான்செர் வராமலும், அல்லது ஆரம்ப நிலையில் கேன்சர் செல்களை அழிக்க தினமும் இப்பழத்தின் ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் குணமாக முடியும். பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் (Estrogen harmon) மாற்றத்தை குறைத்து, மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.
கண்புரை தடுக்கும் (Prevents Cataract):இப்பழத்தில் லுடீன் ஆக்ஸிஜனேற்ற (Lutein Antioxidant) மற்றும் ஜியாக்சாந்தின் (Zeaxanthin) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் கண்களில் உள்ள விழித்திரை (Retina) சேதமடையாமலும், கண்புரை வராமலும் தடுக்கும் (Prevents Cataract). இதை தவிர கண் பார்வை குறைபாடு, கண் பார்வை மங்குதல், வயது காரணமாக ஏற்படக்கூடிய கண் சார்ந்த கோளாறுகளை சரிசெய்யும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு. எனவே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக தினமும் சாப்பிடலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாக:இன்று பல பெண்களுக்கு எதிரியாக இருப்பது முறையற்ற மாதவிடாய். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மாதவிலக்கு தள்ளிபோகுதல், அல்லது அதிகமான உதிரப்போக்கு, அல்லது குறைந்த நாட்களில் மிக குறைவாக இரத்த போக்க போன்ற பல சூதக கோளாறுகளுக்கு திராட்சை பழ சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதவிலக்கு கோளாறுகளை குணப்படுத்த கருப்பு திராட்சைச்சாறு அரை டம்ளரில் சிறிது சக்கரை சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ச்சியாக 21 நாட்கள் குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
திராட்சைப்பழ ரசத்தின் பல்வேறு பலன்கள்:பொதுவாக ஒரு வயது குழந்தைக்கு ஏற்படும் மலக்கட்டு, சளி, காய்ச்சல் போன்றவை சரியாக, இப்பழத்தின் சாறெடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தினமும் 2 வேளை கொடுத்துவந்தால், இப்பிரச்சினைகள் தீரும். மேலும் அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய இரத்தசோகை, உடலில் நீர் சத்து மற்றும் நார்சத்து குறையும் போது ஏற்படக்கூடிய மலசிக்கல், ஜீரணக்கோளாறு, சிறுநீரக கோளாறு, பசியின்மை, வயிற்று புண், வாய் புண் ஆற, பித்தம் நீங்க, கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெற, போன்ற பிரச்சனைகளுக்கு பழமாகவோ, ஜூஸ் தினமும் அல்லது வாரத்தில் 3 முறையாவது திராட்சைப் பழரசம் குடித்துவந்தால் நல்ல தீர்வு கிடைக்கும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications