Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை தேங்காய் சாப்பிடுவதால் அருமையான நன்மை! கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளி தேங்காய்ப் பூ சாப்பிடலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சை தேங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரையுமாம்.. அதுமட்டுமல்ல தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வருவதுடன், சருமத்தின் ஆரோக்கியமும் காக்கப்படும். அந்தவகையில், பச்சையாக தேங்காயை சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய மற்ற நன்மைகள் என்னென்ன தெரியுமா? நீரிழிவு நோயாளிகள், பச்சையாக தேங்காய் சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் தேங்காய் பூக்களை சாப்பிட்டால் என்னாகும்?

தேங்காயில் கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா உள்ளதால், தேங்காய் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பார்கள். உண்மையை சொல்லப்போனால், தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை. அதனால் கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை, இது கொலஸ்ட்ரால் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

கொலஸ்ட்ரால் அதிகம்

அதேசமயம், தேங்காயிலுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கூட்டக்கூடியது தேங்காய். கொழுப்பு எரிபொருளாகவும் பயன்படுகிறது. உடம்பிலுள்ள அழுக்குகளை நீக்கி, ரத்தத்தை சுத்தமாக்குகிறது. தேங்காயில் புரோட்டீன், செலினியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், தலைமுடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் நெருங்காது..

கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், உட்பட பல்வேறு சத்துக்கள் கொண்டதுதான் தேங்காய். இதில் பெரும்பாலும் உள்ளது, நார்ச்சத்துக்கள்.

நார்ச்சத்துக்கள் - நீரிழிவு நோயாளிகள்

இந்த நார்ச்சத்துக்களே ரத்த சர்க்கரை அதிகரிப்பை தடுக்க தூண்டுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள், தேங்காயை சட்னியாக, துருவிப்போடும் பொரியல்களை சாப்பிடலாம்.. ஆனால், வெறும் தேங்காயை அதிக அளவில் அப்படியே சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். சிலர் தேங்காய் பால் எடுத்து சமைப்பார்கள்..

தேங்காயில் உள்ள நார்ச்சத்தை தூக்கிப்போட்டுவிட்டு, வெறும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே எடுத்து கொள்வதில் பலனில்லை.. இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத்தான் செய்யும்.

தேங்காய்பால்

தேங்காய்பாலையும் நேரடியாக பயன்படுத்த கூடாது என்பார்கள்.. இதுவும் இன்சுலின் அளவினை பெருக்கக் செய்துவிடும்.. நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிவு நேரிடவும், அடிக்கடி பசி ஏற்படும்.. அடிக்கடி களைப்படைந்துவிடுவார்கள். இதற்கெல்லாம் தேங்காய் நல்லது. கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைப்பதுடன், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க செய்திடும்.

தேங்காய்ப் பூக்களில் இரும்புச்சத்து, தாமிரம் நிறைய உள்ளதால் ரத்தத்திலுள்ள சிவப்புணுக்களின் எண்ணிக்கையை பெருக்க செய்கிறது.. உடல் எடையை குறைக்க வேண்டுமானால், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மெக்னீசியம் போன்றவை நிறைந்த தேங்காயை சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் - இளந்தாய்மார்கள்

நோய் தொற்றுக்கு எதிராக செயல்படக்கூடிய தேங்காய்கள், சருமம், தலைமுடி, வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு எரிச்சல் போன்றவற்றுக்கு மருந்தாகிறது.

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேங்காய்பூக்கள் மிகவும் நல்லது. இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அத்துடன் கருப்பையிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறும். சிறுநீரக தொற்று உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தேங்காயை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+