வெள்ளை கலரில் விஷம்.. சர்க்கரையால் ஏற்படும் கல்லீரல், கேன்சர் பாதிப்பு? ஒருநாளைக்கு இதுதான் லிமிட்
சென்னை: இனிப்பாக உள்ளது எல்லாமே சர்க்கரை கலந்த பொருள் என்றோ, அல்லது சத்து என்றோ கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.. சர்க்கரை சத்து என்பது இயற்கையாகவே சில உணவுகளில் அடங்கியிருக்கின்றன.. ஆனால், வெள்ளை சர்க்கரை அப்படியில்லை.. அது உடலுக்கு பல்வேறு வழிகளில் தீங்கை தரக் கூடியது. சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
சர்க்கரையை தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக பார்க்கலாம்.

பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், இளநீர் போன்றவைகள் இனிப்பாக ருசிக்கும். ஆனால், இவைகள் இயற்கையான முறையில் கிடைக்கும் சர்க்கரை ஆகும்.. ஆரோக்கியத்துக்கு தேவையான சர்க்கரையும் கூட.
வெள்ளை சர்க்கரை
ஆனால், வெள்ளை சர்க்கரையை பொறுத்தவரை, பெரிதாக எந்த நன்மைகளும் கிடையாது.. இனிப்புகளில் நார்ச்சத்து, புரோட்டீன் குறைவாக இருப்பதால், சாப்பிட்டதுமே பசி எடுக்கும. கலோரிகளில் சர்க்கரை 10% க்கும் குறைவாகவும், 5% க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 6 ஸ்பூனுக்கு மேல் சர்க்கரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆனால் பெரும்பாலும், சர்க்கரையில் நன்மைக்கு பதில் தீமைகள்தான் உள்ளன. அது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிலும், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு அடிப்படை காரணமாக உள்ளது..
கல்லீரல் ஆரோக்கியம்
அதுமட்டுமலல, சொத்தை பற்கள், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, குடற்புண், சளித்தொல்லை, இதய பாதிப்பு, இரத்தம் அழுத்தம், கேன்சர் என அனைத்துவிதமான நோய்களும் உடலில் பீடித்து கொள்ள சர்க்கரையே பிரதான காரணமாக உள்ளது. அதிலும் கல்லீரல் ஆரோக்கியத்தை கெடுப்பதே இந்த சர்க்கரைதான்..
ஏனென்றால், சர்க்கரையில் "பிரக்டோஸ்" அதிகமாக இருப்பதால், உடம்பில் கொழுப்பை உருவாக்க தூண்டுகிறது. எனவேதான், சர்க்கரையை அதிகமாக சாப்பிடும்போது, கல்லீரலில், கொழுப்பு அமிலங்கள் ஏற்படுகின்றன.. இதனால் கல்லீரல் நேரடியாகவே பாதிப்புக்கு ஆளாகின்றன.
மாரடைப்பு, பக்கவாதம்
அதுமட்டுமல்ல, உணவில் அதிகமாக சர்க்கரையை சாப்பிடுபவர்கள், குறைந்த அளவு சர்க்கரை சாப்பிடுபவர்களைவிட இதய நோய்களால் மரணிக்க சான்ஸ் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், இருதயத்துக்கும், வெள்ளை சர்க்கரைக்கும் நேரடியான தொடர்பு உள்ளது.. எனவே, சர்க்கரையை தவிர்த்தாலே இருதயம் காக்கப்படும். ஆபத்தான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் தடுக்கலாம்.
வெள்ளை விஷம்
பொதுவாக சர்க்கரையை வெள்ளை விஷம் என்றே சொல்வார்கள்.. ஏனென்றால், சர்க்கரையிலுள்ள சல்பர்டை ஆக்சைடு என்ற ரசாயனம்தான், மஞ்சள் நிறமாகி, விஷத்தன்மையாகிறது.
எனவே சர்க்கரையை தவிர்த்துவிடுவதே சரியான விழ என்கிறார்கள். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், ஒரு மாதம் சர்க்கரையை தவிர்த்தால, கலோரியின் அளவு வெகுவாக குறைய ஆரம்பிக்கும்.. உடல் எடையும் குறையும், படிந்துள்ள கொழுப்புகளும் கரைய ஆரம்பிக்கும்.. பற்கள் உறுதிபெறும். உடம்பிலுள்ள ஆற்றலின் அளவு பெருகும்.. கல்லீரல் காக்கப்படும்.. சரும ஆரோக்கியம் சிறப்பதால், முகத்தில் சுருக்கத்தை விலக்கி வைக்க முடியும்..












Click it and Unblock the Notifications