மூட்டு வலி, முழங்கால் வலிக்கு முடிவு கட்டும் சால்மன் மீன்.. எலும்புக்கு பலம் தரும் உணவுகள் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முழங்கால் வலி, மூட்டு வலி, மூட்டு விறைப்பு, மூட்டு வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் 40 வயதுக்கு மேற்பட்டவரை தாக்கக்கூடியது.. குறிப்பாக வயதானவர்கள் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. மூட்டு வலிக்கு என்ன காரணம்? முறையான சிகிச்சையை மருத்துவர்களிடம் பெறுவது கட்டாயம் என்றாலும் உணவு முறைகளிலும் கூடுதல் கவனத்தை செலுத்தலாம். அந்தவகையில் ஒருசில உணவு வகைகளை பார்க்கலாம்.

காலநிலை மாற்றம் என்பது மூட்டுவலி பிரச்சனைகளுக்கு பிரதான காரணமாக உள்ளதை பலரும் அறிவதில்லை.. வயதாகும்போது, மூட்டுகளிலுள்ள மசகு எண்ணெய், கால்சியம் குறைபாடு உள்ளிட்ட காரணங்களினாலும், முழங்கால் வலி, மூட்டுவலி உண்டாகிறது. அதேபோல சரியான உணவு சாப்பிடாதது, சுகாதார முறை போன்றவையும் மூட்டு வலிக்கு காரணமாக உள்ளது..

Salman Fish Rheumatic pain Bones

என்னென்ன தவிர்க்கலாம்

இதற்கெல்லாம் முக்கியமாக எலும்புகளுக்கு பலம் தரக்கூடிய வகையில் உணவுகளை சாப்பிடுவது பலன் தரும்.. குறிப்பாக கால்சியம் சத்துக்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்.

அதேசமயம் மூட்டு வலியைக் குறைக்க, சில உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் முக்கியமானது, சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும்.. அதிலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தொடவே கூடாது.. காரணம் இனிப்பு பானங்கள் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம், இது மூட்டு வலியை கூட்டிவிடும்.

ஆல்கஹால் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளையும் தவிர்க்கலாம். வறுத்த உணவுகள் முழங்கால் வலியை அதிகமாக்கிவிடும்.. முட்டைகளை சாப்பிட்டாலும், வீக்கம் மற்றும் மூட்டு வலியை அதிகரிக்கலாம். ஏனென்றால், மஞ்சள் கருவில் அராச்சிடோனிக் அமிலம் இருக்கிறதாம்.

அப்படியானால் என்ன சாப்பிடலாம்?

சோயா பீன்ஸ் இந்த பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. ஏனென்றால், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டீன், நார்ச்சத்து நிரம்பி உள்ளன.. முழங்கால் வலிக்கு வெந்தயம் பயன்தரும்.. வெந்தய விதைகளை தூள் செய்து, அரை டீஸ்பூன் தினமும் 2 வேளை, உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் மூட்டுவலியும் குறையும்.

சமையலில், இஞ்சி, பூண்டு, மஞ்சள் இந்த மூன்றையுமே சேர்த்து கொள்ளவேண்டும். ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
அழற்சி பண்புகளும், எதிர்ப்பு பண்புகளும், இஞ்சி, பூண்டு இரண்டிலுமே நிறைய உள்ளன

பழங்கள், கீரைகள்

அவகேடா பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் உள்ளன. இந்த பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி, எலும்பு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

புரோக்கோலி, கீரைகள், ஆப்பிள், பாதாம் பருப்பு, ஆளி விதை, சியா விதைகளை உணவில் சேர்க்கலாம்.. டீ தயாரிக்கும்போது 2 துளசி சேர்த்து கொதிக்க வைக்கலாம். கீல்வாதம் பிரச்சனை இருந்தால் கிரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால், டீ, காபி எதுவாக இருந்தாலும் சர்க்கரையை தவிர்த்துவிட்டு வெல்லம் சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால், முழங்கால் வலிக்கு, வெல்லம் சிறந்த மருந்தாகும்.

எலும்பு சூப் , சால்மன் மீன்கள்

ஆட்டுக்கால் சூப், அல்லது எலும்பு சூப் குடிப்பது சத்துக்களை தருகிறது.. இதற்கு காரணம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலமும் அடங்கியிருக்கின்றன.

குளுக்கோசமைன், காண்ட்ராய்டின், அமினோ அமிலங்கள் இந்த எலும்பு சூப்பில் உள்ளதால், மூட்டுகளுக்கு நல்லது.. கலோரி கட்டுப்பாட்டையும் ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. மூட்டுவலி மட்டுமல்ல, மூட்டு தேய்மானம் , முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான தொந்தரவில் சிக்கி உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் நல்லது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலமும், வைட்டமின் D அதிகமுள்ள சாலமன் மீன்கள், கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்களை வாரம் 2 முறை, 3 முதல் 4 அவுன்ஸ் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு உயிரணு உற்பத்தி பெருக செய்து, மூட்டுகளுக்கு பலம் கிடைக்கும்.. சால்மன் மீனில், வைட்டமின், தாதுக்கள், ஒமேகா 3 மட்டுமல்லாது கால்சியம் சத்துக்களும் அதிகமாக உள்ளன. கெண்டை மீனிலும் கால்சியம் நிறைய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+