ப்ரோக்கோலியில் இவ்ளோ சத்துக்களா? கேன்சர், ஹார்ட் அட்டாக் தடுக்கும் புரோக்கோலி.. பச்சை பூக்கோசு நன்மை
சென்னை: அனைவரையும் புரோக்கோலி சாப்பிட சொல்ல என்ன காரணம் தெரியுமா? இதய நோயை முன்கூட்டியே வராமல் தடுக்க செய்யும் புரோக்கிலினில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? புரோக்கோலி தரும் 10 நன்மைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு கப் ப்ரோக்கோலியில், நமக்கு அன்றாடம் தேவைப்படும் நோயெதிர்ப்பு சக்தியும், கொலாஜனை ஆதரிக்கும் வைட்டமின் C சத்துக்கள் 135% சதவீதமும், குரோமியம் 50 சதவீதத்துக்கும் மேலாகவும் நிறைந்திருக்கிறது.

ஒரு கப் சமைத்த ப்ரோக்கோலியில், ஒருநாளுக்கு நமக்கு தேவையான வைட்டமின்களான A, B6, B2, E, பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.. இவைகள் அனைத்துமே நமக்கு தினமும் தேவைப்படும் அளவைவிட 10 சதவீதம் அகிமாகவே இந்த புரோக்கோலியில் உள்ளது.
கனிம சத்துக்கள் அதிகம்
ரத்த சர்க்கரை ஒழுங்குமுறைக்கு துணைபுரியக்கூடிய கனிமசத்துக்கள் புரோக்கோலியில் உள்ளது.. அத்துடன், ஃபோலேட்டு (folate) சத்துக்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.. இந்த ஃபோலேட்டு சத்து நமக்கு இன்றியமையாத சத்தாகும். குறிப்பாக, நினைத்திறன், மூளை செயல்பாடுகளை ஊக்குவித்து பராமரிக்கக்கூடியது இந்த ஃபோலேட்டு சத்துக்கள்தான்.
ப்ராக்கோலியிலுள்ள வைட்டமின் C, K, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மன நலத்தை அதிகரிக்க செய்வதால்தான், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதுடன், ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் உள்ளிட்ட பொருட்களும் நிறைந்திருக்கின்றன. இவை அத்தனையும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள்
ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் போன்றவை, புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மைக்கொண்டவை,.. சமீபகாலமாகவே பெண்களை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய்கள் உருமாறி வருவதால், புரோக்கோலியை பெண்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு கப் சமைக்கப்படாத ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. 5 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது.. கொழுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.. எனவேதான் புரோக்கோலி மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.
எலும்புகள், பற்கள் உறுதித்தன்மை
5 சதவீதத்திற்கும் குறைவான மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு , கால்சியம் செலினியம் உள்ளன.. புரோக்கோலியிலுள்ள வைட்டமின் K சத்துக்கள், நம்முடைய உடலின் ரத்தம் உறைவுக்கு உதவுகிறது, அத்துடன் பற்களின் ஆரோக்கியம், எலும்புகளின் உறுதித்தன்மையும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
சரும அலர்ஜியை புரோக்கோலி காக்க செய்கின்றன.. எனவே, எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. காரணம், இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், கேம்ப்ஃபெரால் போன்றவைகள், சரும அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.
யாரெல்லாம் புரோக்கோலி தவிர்க்கலாம்
பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் அதிகமாக உள்ளதால், மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடிகிறது.. புரோக்கோலியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, தமனிகள் சேதமாவது குறைக்கப்பட்டு, இதய நோய் அபாயமும் குறைக்க செய்கிறது. புரோக்கோலி சாப்பிடுவதால் செரிமானம் சீராகிறது.. குடல்கள் ஆரோக்கியம் பெறுகின்றன..
இத்தனை சத்துக்கள் இருந்தாலும், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் இதை சாப்பிட கூடாது. ஏனென்றால், தைராய்டு உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.. அதிகமான ப்ரோக்கோலி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.. இதற்கு சமையலில் நிறைய பூண்டு சேர்த்து கொள்வதால், இந்த வாயு தொல்லையை அகற்றலாம்.












Click it and Unblock the Notifications