Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகருன்னு கூந்தல்.. நீளமாகவும், அடர்த்தியாகவும் தலைமுடி வளர.. இந்த 2 பொருள் போதுமே.. பெஸ்ட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய சூழலில், தலைமுடி உதிர்வதும், பலவீனமான தலைமுடியும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று சின்ன சின்ன தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி உதிர்தலை சரி செய்து கொள்ள முடியும்.

தலைமுடி வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதுபோல உணவுகள் இருக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் C, B, E போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

Best tips for Hair Growth Naturally and Do you know which is the Super Oil to grow the Healthy Hair

காரணம், வைட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின்கள் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகமாகிறது..

வைட்டமின் E நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன.

பச்சை கற்பூரவல்லி: கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து குளிக்கலாம்.. அல்லது தேங்காய் பாலுடன், பச்சை கற்பூரவல்லி இலையை சேர்த்து, வெயிலில் காயவைத்து, தலைமுடியில் பூசிவந்தாலும் முடி அடர்த்தியாக வளரும்.. அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் 3 வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தாலும் தலைமுடி நன்றாக வளரும்

வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால், முடி செழித்து வளரும்... அல்லது கறிவேப்பிலை + சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து, தயிருடன் சேர்த்து, தலைக்கு குளித்து வந்தாலும், முடி உதிர்வது உடனே நின்று, வளர தொடங்கும்.

பீர் அலசல்: ஒரு டம்ளர் பீரில் தலைமுடியை மசாஜ் செய்து அலசலாம்.. அல்லது வினிகரையும், தண்ணீரில் கலந்து தலைமுடிக்கு தடவி மசாஜ் செய்யலாம். வெந்தயம், குன்றிமணி இரண்டையும் தூள் செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் உடனே நிற்குமாம்.. தலைமுடியை சாதம் வடித்த தண்ணீரில் அலசலாம் அல்லது மோரில் அலசலாம். காரணம், நீர் மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. இறந்த செல்களை நீங்கி, தலைமுடி வளர்ச்சியை மோர் ஊக்குவிக்கிறது

தலைமுடி: வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து, தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளித்துவிடலாம். இதனால் தலைமுடி உதிர்வது நிற்கும்.. வெங்காயத்தை நீரில் போட்டு வேகவைத்து, பிறகு அந்த நீரில் தலைமுடியை அலசிவந்தால் தலைமுடி உறுதியாகும். அல்லது வெங்காயத்தை ஜூஸ் போல எடுத்து, தலைமுடிக்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசி வந்தாலும் முடி கொட்டுவது நிற்கும்..

தலைக்கு சத்து நிறைந்த எண்ணெய்யை நாமே வீட்டில் தயாரித்து தலைக்கு தடவி வரலாம்.. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமின்றி விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்..

சத்தான எண்ணெய்: ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த விழுதை கொட்டி, சிறிது வெந்தய பொடியையும், அதில் சேர்த்து கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்தி வரலாம்.

வழுக்கை தலையாக இருப்பவர்களுக்கும் இயற்கை முறையிலேயே முடி வளர வழி உள்ளதாம்.. அதாவது, கீழாநெல்லி வேர்களை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் என்கிறார்கள்.

கீழாநெல்லி தைலம்: அதேபோல, நல்லெண்ணெய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவைகளில் 9 கிராம் எடுத்து, பசும்பால் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளலாம். இதற்கு கீழாநெல்லி தைலம் என்று பெயர்.. கடைகளிலும் இந்த கீழாநெல்லி எண்ணெய் விற்கிறார்கள்.. இதனை தலைக்கு தேய்த்து குளித்து வருவதால், உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும்... அது மட்டும் அல்ல முடி நன்றாக வளருமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+