Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொத்து கொத்தா கொட்டுதா தலைமுடி.. அப்ப "இது" ட்ரை பண்ணுங்க..கருகருனு வளருமாம் தலைமுடி.. பெஸ்ட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய சூழலில், இளநரையும், தலைமுடி கொட்டுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.
நாம் உண்ணும் உணவிற்கும், தலைமுடிக்கும் நேரடி தொடர்பு உள்ளது.. ஆரோக்கியமான உணவை பின்பற்றாதபோது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அது தலைமுடியில் காட்டி தந்துவிடும். இதனால் ஏற்படுவதுதான் நரைமுடி பிரச்சனையும், தலைமுடி உதிர்தல் பிரச்சனையும்.

மாசுபாடு, அசுத்தமான தண்ணீர், போன்றவைகளும் தலைமுடியின் தரத்தை வெகுவாகவே பாதிக்கிறது. மேலும், மன அழுத்தமும், சரியான தூக்கமின்மையும் மிக முக்கியமான காரணங்களாகிவிடுகின்றன.

Best tips to grow the Healthy Hair and Do you know what foods are rich in vitamin E

கறிவேப்பிலை: இளம் வயதினருக்கு அதாவது 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கூந்தல் கருப்பாக மாற வேண்டுமானால், பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை இந்த 4 வகையான இலைகளையும் சம அளவு எடுத்து, லேசாக பொடி செய்து, நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை தினமும், மயிர்க்கால்கள் வரை தடவி மசாஜ் செய்துவந்தாலே, தலைமுடி கறுப்பாக மாற துவங்கும்.

அதேபோல, தலைமுடி வளர வேண்டுமானால், ஆவாரம் பூ, வெந்தயம், பயத்தம் பருப்பு மூன்றையும் அரைத்து வைத்து கொண்டு, வெந்நீரில் கரைத்து வாரம் 2 முறை தலையை அலசிவந்தாலும் கூந்தல் உதிர்வது நிற்கும்.. உடல்சூடு தணிந்து, தலைமுடி வளர துவங்கும்.

வெள்ளைக்கரு: அல்லது, கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைத்து, பிறகு, தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் மிகுந்த பலன் தரும்.. முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்..

முட்டை + தேங்காய் எண்ணெய் + சிறிது வெந்தய பொடி போன்றவற்றை நன்றாக குழைத்து தலையில் வேர்க்கால்கள் வரை தேய்த்து மசாஜ் செய்து குளித்து விடலாம்.. அல்லது கற்றாழை ஜெல் + முட்டையின் வெள்ளை கரு + தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மிக்ஸ் செய்து தலைக்கு தடவி மசாஜ் செய்து குளிக்கலாம். வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.

வைட்டமின் E: இவைகள் எல்லாம் தலைமுடியை பராமரிக்க மேற்கொள்ள உதவும் என்றாலும், நாம் சாப்பிடும் உணவிலும் சற்று கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வைட்டமின் E நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதனால், நரைமுடி நீங்குவதுடன், வெடித்த தலைமுடிகளும் சீராகும்.

அந்தவகையில், சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E அதிகம் உள்ளது.. அதேபோல, தாவர எண்ணெய்களிலும், வேர்க்கடலை, பாதாம், கடலை, கொண்டை கடலை, வெண்ணெய், ப்ரோக்கோலி, கீரைகளில், பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் E அதிகம் உள்ளது.

நிறைய தண்ணீர்: இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே, தலைமுடி வளர்ச்சியில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தண்ணீர் அதிகமாக குடிப்பதுடன் + ஆரோக்கியமான உணவு + போதுமான தூக்கம் + நிம்மதியான மனநிலை இருந்தாலே, தலைமுடி தானாகவே வளர ஆரம்பித்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+