Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் நம் சொத்து..எங்கே? எப்படி தானம் செய்வது..சொல்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனிதர் தன் சொத்துக்களை தனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உயில் எழுதுவது எப்படி இயல்பான, நியாயமான விஷயமோ அப்படி தன் உடலையும் ஒரு சொத்தாக மதித்து அதை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிற பரிபூரண உரிமையும் உண்டு. இதில் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்க அவசியமில்லை என்று உடல் தானம் பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

உடல் உறுப்பு தானம் என்பது வேறு. (Organ donation) உடல் தானம் என்பது வேறு. (Body donation)
மூளை சாவு அடைந்த ஒரு மனிதரின் உறவினர்கள் சம்மதத்துடன் அவர் உடலின் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. நாம் உயிருடன் இருக்கும்போதே விரும்பினால் நம் உயிருக்கு ஆபத்து எதுவுமின்றி ஒரு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதி இவற்றை தானமாகத் தரலாம்.

Body donation Doubt of Common Man - Writer Pattukottai Prabhakar post his FB page

விபத்துகளின்போது மூளைச் சாவை அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.

நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும்கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும். இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. 2018ம் வருடத்தில் 887 நபர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் 4,938. இதுவே 2019ம் வருடத்தில் தானமாக பெறப்பட்டு பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் 7,783.

மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்காக மனித உடல்கள் மிகவும் அவசியப்படுகின்றன. ஆனால் சடங்கு, சம்பிரதாயங்கள், ஆத்ம சாந்திக்கான வழிமுறைகள் என்கிற நம்பிக்கைகளுடன் வாழ்பவர்கள் அதிகம் உள்ளதால் இறப்புக்குப் பிறகுதான் என்றாலும் மக்களுக்கு தம் உடலை தானம் செய்வதில் மிகுந்த தயக்கம் உண்டு.

ஒரு மனிதர் தன் சொத்துக்களை தனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உயில் எழுதுவது எப்படி இயல்பான, நியாயமான விஷயமோ அப்படி தன் உடலையும் ஒரு சொத்தாக மதித்து அதை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிற பரிபூரண உரிமையும் உண்டு. இதில் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்க அவசியமில்லை.

நடிகர் கமல்ஹாசன் உடல்தானம் செய்வதாக பல வருடங்கள் முன்பே அறிவித்தார். திருச்சியில் என் மாமனார் பலவருடங்கள் முன்பே உடல் தானம் செய்ய பதிவு செய்தார். அப்போதிருந்தே எனக்கும் அதே எண்ணம் இருந்துவந்தது. ஆனால் சமீபத்தில் எழுத்தாளர் சவிதாவும், என் ரசிகர் கமலக்கண்ணனும் தங்கள் பிறந்த நாள் அன்று உடல் தானம் செய்வதாகப் பதிவு செய்த செய்தி அறிந்த பிறகு இந்த எண்ணம் தீவிரமானது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் முறையாக விண்ணப்பித்து, என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், இரண்டு மருமகன்களின் சம்மதத்துடன் என் உடலை தானம் செய்ய பதிவு செய்திருக்கிறேன். இதில் குடும்பத்தினரின் சம்மதமே மிக முக்கியம். ஏனென்றால் இந்த விருப்பத்தை நிறைவேற்றப்போவது அவர்கள்தானே?
இதை பெருமைக்காக பதிவு செய்யவில்லை. இதேபோல பலருக்கும் எண்ணம் இருந்தும் சில தயக்கங்கள் காரணமாக செயல்படுத்தாமல் இருக்கலாம். அவர்களுக்கு முடிவெடுக்க ஒரு தூண்டுதலாக அமையும் என்கிற நோக்கத்தில்தான் பகிர்கிறேன்.

https://www.facebook.com/pkp.prabakar/posts/pfbid035bWAJDbpY5R6HAY51EkhrGSXSrZSHMn1V9ukvFNobFhdEn9wxJmEcR5FpiDci9FTl

உடல் தானத்தில் கண்களின் கார்னியா மட்டுமே ஆறு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டு பார்வையற்றோருக்குப் பொருத்த இயலும். குளிர் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும் உடலாய் இருந்தால் எட்டு மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.

நாம் எந்த மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்து வைத்திருக்கிறோமோ அந்தக் கல்லூரியில் போனில் அழைத்து பதிவு எண்ணுடன் தகவல் சொன்னால் போதும். அவரவர் வசிக்குமிடத்திலிருந்து அருகாமையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உடல் தானத்திற்குப் பதிவு செய்யலாம்.

நேரில் சென்று அதற்கான விண்ணப்பம் பெற்று, நிரப்பி குடும்ப உறுப்பினர்கள் இருவரின் சம்மதக் கையெழுத்து, மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் ஒப்படைத்தால் பதிவு எண்ணுடன் அட்டை தருவார்கள். தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசின் இணையதளங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

தவிரவும் இந்தப் பதிவை இணைய வழியில் செய்துத்தர தனியார் அமைப்புகளும் பல இயங்குகின்றன.
மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாக பதிவு செய்வது சிறந்தது என்பதால் நான் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் செய்திருக்கிறேன்.

சென்னையில் வாழ்பவர்கள் இதே மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்ய விரும்பினால் என்னை உள்பெட்டியில் தொடர்பு கொண்டால் அங்கே தொடர்புகொள்ள வேண்டிய மருத்துவ அதிகாரி குறித்து தகவல் தருகிறேன்.
இணைய வழியில் பதிவு செய்ய விரும்பினால்.. இணையதள முகவரி: www.organindia.org.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+