மினுமினு மேனி ஆரோக்கியத்துக்கு குப்பைமேனி.. சொத்தை பல் முதல் குடல் புண் வரை ஓட்டும் குப்பைமேனி தழை
சென்னை: பல்வேறு நோய்களை போக்கக்கூடிய குப்பைமேனி இலைகளை பற்றி தெரியுமா? இந்த குப்பை மேனியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யின் பயன்கள் என்னென்ன? குப்பைமேனி இலைகளிலுள்ள எதிர்ப்பு பண்புகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
குப்பையில் வளரக்கூடிய குப்பை மேனி இலைகள், ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியவை.. இந்த இலையில் 2 மிளகு வைத்து அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகும்.

குடல் புண்கள்: குடல் புண்களுக்கு இந்த குப்பை மேனி இலைகள் சிறந்த மருந்தாகும்.. இந்த இலையின் சாற்றிலிருந்து 30 மில்லி தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலே, வயிற்றிலுள்ள நச்சுக்கள், புழுக்கள் வெளியேறிவிடும்.. அல்லது குப்பைமேனி இலையை தூள் செய்து விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்று பூச்சிகள் வெளியேறிவிடும்... கண் வியாதிகளை போக்கி, பார்வையை கூர்மையாக்ககூடிய சக்தி குப்பை மேனிக்குஉண்டு.
நரம்பு பலவீனமாக இருந்தாலோ அல்லது உடல் வலி, கால் வலி, மந்தத்தன்மை போன்ற தொந்தரவு இருந்தாலும், குப்பைமேனி இலைகளே மருந்தாகின்றன. சளி, தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் போன்ற பிரச்சனைகளுக்கு குப்பைமேனி இலையை கசக்கி சாறு எடுத்து, அதில் சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பூசுவதால் நிவாரணமும், தீர்வும் உடனடியாக கிடைக்கும்.
சொத்தை பல்: சொத்தை பல் அல்லது பல் வலி இருந்தால், குப்பை மேனி இலைகளை கழுவி, விரல்களாலேயே நசுக்கி, சொத்தை பற்களின் மீது வைத்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த குப்பைமேனி இலையில் தயாரிக்கப்படும் கஷாயமானது, ஈரல் நோய்கள், மண்ணீரல் நோய்கள், மண்ணீரல் வீக்கம், மண்ணீரல் விரிவாக இருப்பது, ஈரலை பாதிக்கக்கூடிய பல்வேறு தொற்றுகள் போன்றவற்றுக்கு மருந்தாகின்றன..
மேனியை காக்கக்கூடியது இந்த குப்பைமேனி இலைகள்.. காரணம், குப்பை மேனியில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்டுகள், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன..
எதிர்ப்பு பண்புகள்: பேசிலஸ் சப்டிலிஸ், எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து போராடுகிறதாம் இந்த குப்பைமேனி இலைகள். அதனால்தான், சருமத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளையும் நீக்கும் சக்தி குப்பைமேனிக்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சிறிது கல் உப்பை, குப்பைமேனியில் சேர்த்து அரைத்து உடம்பெல்லாம் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் மாறி பொலிவை தரும். புண்கள், காயங்கள், அல்லது தீக்காயங்கள் இருந்தாலும், இந்த குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பற்று போல பூசலாம்.
அதேபோல, இந்த குப்பைமேனி இலையில் எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தலாம். ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை சுத்தம் செய்து, விழுதுபோல அரைத்து, அதன் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் பயன்: ஒரு வாணலில் இந்த சாற்றினை ஊற்றி, அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சமமாய் சேர்த்து, அத்துடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து சத்தம் அடங்கும்வரை காய்ச்சி, அடுப்பை நிறுத்திவிட வேண்டும். இதிலுள்ள தண்ணீர் வற்றி, வாணலில் எண்ணெய் மட்டும் தேங்கி நிற்கும். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து கொண்டால், அனைத்து வகையான தோல் நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, தோல் அழற்சி, தடிப்பு தோல் அழற்சி, காயங்கள், சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள், தீப்புண்கள், அரிப்பு, தடிப்பு, எரிச்சல், இப்படி அனைத்துவிதமான நோய்களுக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications