பிரிட்ஜில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க.. ஃபிரிட்ஜ்ஜில் முட்டையை வெக்கறீங்களா? அப்ப இது பாருங்க
சென்னை: பிரிட்ஜில் முட்டைகளை வைக்கலாமா? வைக்கக்கூடாதா? முட்டைகளை எப்படி கெட்டுப்போகாமல் பயன்படுத்தலாம்?
முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு முன்பு, சால்மோனெல்லா என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்... அதாவது, கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் உருவாகும் பாக்டீரியாக்கள்தான் இந்த சால்மோனெல்லா..

இனப்பெருக்கம்: இந்த பாக்டீரியாக்கள் சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. ஆனால், அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன... இந்த பாக்டீரியாக்கள் நம்முடைய உடலுக்குள் சென்றால், குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
நாம் கடையில் வாங்கிவரும் முட்டையிலும், இந்த சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருக்கலாம். இது தெரியாமல் நாம் முட்டையை ப்ரிட்ஜில் வைக்க நேர்ந்தால், மற்ற முட்டைகளிலும் இந்த பாக்டீரியா பரவிவிடும். எந்த முட்டையில் பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நம்மாலும் கண்டுபிடிக்க முடியாது.
பாக்டீரியாக்கள்: அதுமட்டுமல்லாமல், எப்போதுமே முட்டைகளில் பாக்டீரியா தொற்றுக்கள் சீக்கிரமாக பற்றிக்கொண்டுவிடும்... இந்த பாக்டீரியாக்கள் முட்டைகளின் ஓடுகளிலிருந்தே உருவாகக்கூடியவை.. அதேபோல, முட்டையின் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது. அதனால்தான் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள்..
சாதாரணமாக அறையின் வெப்பநிலையில் வைக்கும் முட்டைகளைவிட காட்டிலும், பிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டைகள் வெகுசீக்கிரத்தில் கெட்டு விடும். முட்டையிலுள்ள கருவானது, பால் போல திரிந்துவிடும். வேண்டுமானால், முட்டைகளை சுத்தம் செய்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால், அந்த முட்டைகளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது. நல்ல சுத்தமான முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமே தவிர, உடைந்த முட்டைகளை பிரிட்ஜில் வைக்கவே கூடாது.
முட்டைகள்: அதிலும் முட்டையை பிரித்து வைக்காமல், அசல் அட்டைப்பெட்டியிலேயே வைத்து பாதுக்கலாம்.. இப்படி அட்டை பெட்டியுடன் வைக்கும்போது, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து மற்ற நாற்றங்கள் மற்றும் சுவைகளை உறிஞ்சுவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பிறகு அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும்போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டிலுள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே சென்றுவிடுமாம்.. அதனால் முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.
பாக்டீரியாக்கள்: அதற்காக நீண்ட நேரம் வெளியிலும் வைத்திருக்கவும் கூடாது... 3 நாட்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கும் முட்டையை சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையேல் பாக்டீரியாக்களினால் ஒவ்வாமை உண்டாகும்.
ஒருவேளை முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமென்றாலும், முட்டையை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது. காரணம், பிரிட்ஜில் வைக்கும் முட்டைக்குள்ளேயிருக்கும் கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதில் கேக் செய்ய முற்படும்போது, அந்த கேக் கடினமாக இருக்கும்.
பச்சை முட்டை: அதுமட்டுமல்ல, இந்த முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளதால்தான், முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.. எனவே, நன்றாக சமைத்து சாப்பிடும்போது, பாக்டீரியாக்கள் இறந்துவிடுகின்றன..!!












Click it and Unblock the Notifications