ஃபிரிட்ஜில் இஞ்சி, பூண்டு வைக்கறீங்களா? இதை பிரிட்ஜ்ஜில் வைத்தால் "ஆரோக்கியம்" காலி.. இவ்ளோ இருக்கா
சென்னை: ஃபிரிட்ஜில் சில பொருட்களை வைத்து பயன்படுத்தக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.. அந்தவகையில், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், இஞ்சி, பூண்டு, போன்றவற்றை பிரிட்ஜ்ஜில் வைக்கலாமா? என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
வழக்கமாக முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள். சாதாரணமாக அறையின் வெப்பநிலையில் வைக்கும் முட்டைகளைவிட காட்டிலும், ஃ பிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டைகள், சீக்கிரத்திலேயே கெட்டுவிடுமாம். அதேபோல, வெளியில் வைத்திருந்தாலும்கூட, 3 நாட்களுக்கு மேல் வைத்திருந்து சாப்பிட்டால், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தக்காளி: அதேபோல, தக்காளியையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது.. அதிகமான குளிர் தக்காளியின் சுவையை பாதித்துவிடும்.. அதனால், காற்றுப்புகக்கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளிகளை வைத்திருக்கலாம்.. அதுமட்டுமல்ல, ஃபிரிட்ஜில் தக்காளி வைத்தால் பழுப்பதே கிடையாது.. எனவே, சுவையுடனும், பளபளப்புடனும் தக்காளி இருக்க வேண்டுமானால், சாதாரண ரூம் தட்பவெப்பமே போதுமானது.
கத்திரிக்காயை பொறுத்தவரை, வெப்பநிலை உணர்திறன் கொண்ட காய்கறியாகும்.. அதனால், ஃபிரிட்ஜில் வைக்கும்போது, கெட்டுப்போக வாய்ப்புள்ளது.. அதாவது, 10° C க்கும் குறைவான வெப்பநிலை கத்தரிக்காயின் அமைப்பையும், சுவையையும் குலைத்துவிடுமாம்.. அதனால், ரூம் அறையிலேயே கத்தரியை சேமிக்கலாம.
வெங்காயம்: வெங்காயத்தை பொறுத்தவரை, ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது.. அப்படி வைக்கும்போது ஒட்டுமொத்த ஃப்பிரிட்ஜையும் வெங்காயம் நாற்றம் அடித்துவிடும்.. இதனால், ஃபிரிட்ஜிலுள்ள மற்ற பொருட்களிலும் வெங்காய வாடை சேர்ந்துவிடும்.
வெப்பம் அவ்வளவாக இல்லாத, சற்று இருண்ட இடத்தில் வெங்காயத்தை வைத்திருந்தாலே போதும். ஆனால், உருளைக்கிழங்குடன் வெங்காயத்தை சேர்த்து வைக்கக்கூடாது. காரணம், உருளைக்கிழங்கிலிருந்து வெளிவரும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுக செய்துவிடுமாம்.
இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.. ஆனால், சுத்தம் செய்துவிட்டுதான் வைக்க வேண்டும்.. அதுவும், ஈரமாக இல்லாமல், நன்றாக உலர்ந்த இஞ்சியை ஒரு டப்பாவில் வைத்து பிரிட்ஜில் சேமிக்கலாம்.. ஆனால், இந்த டப்பாவில் சிறிது காகிதத்தை வைத்து, அதில் இஞ்சியை போட்டு, மூடியினால் சரியாக மூடிவைக்க வேண்டும். இதனால், இஞ்சி கெடாமல் இருக்கும்.
தவிர்க்கலாம்: பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.. தேவைப்பட்டால், தோலுரித்த பூண்டை, டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கலாம்.. முழு பூண்டையும் ஃப்பிரிட்ஜில் வைத்தால், அதிலிருந்து பச்சை தளிர்கள் வளர துவங்கிவிடும். எனவே, தோல் உரித்த பூண்டு அல்லது பூண்டு விழுதாக ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications