தோலோடு பழங்களை சாப்பிடலாமா? கொய்யா பழம்.. பேரிக்காய்.. இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க.. பயனுள்ள பழத்தோல்
சென்னை: கொய்யா, மாம்பழம், வாழைப்பழங்களை தோலுடன் அப்படியே சாப்பிடலாமா? அல்லது தோல் நீக்கிவிட்டு சாப்பிட வேண்டுமா?
எப்போதுமே பழங்களை நாம் சாப்பிட்டுவிட்டால், அதன் தோலை வீசி எறிந்துவிடுகிறோம். ஆனால், நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல்களில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..

பழங்கள்: அதிலும் நாம் ஜூஸ் வடிவில் தயார் செய்து குடிக்கும்போது, தோலுடன் அதிலிருக்கும் நார்ச்சத்துக்களையும் வீசியெறிந்துவிடுகிறோம்.. எந்ததெந்த பழத்தின் தோலில், அதிக சத்துக்கள் உள்ளன? அவைகளின் பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பேரிக்காய் பழங்களை எடுத்துக்கொண்டால், தோலுடன் சாப்பிட வேண்டும். தோலை நீக்கிவிட்டால் சத்துக்கள் குறைந்துவிடும்.. பேரிக்காய்களில் பிரதானமாக நார்ச்சத்து உள்ளதால், அஜீரண கோளாறுகளுக்கு பேரிக்காய் தோல் மிகவும் நல்லது.
சப்போட்டா: அதேபோல, சப்போட்டா பழங்களையும் தோலுடன் சாப்பிட வேண்டும். வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதால், தோலை நீக்கிவிடக்கூடாது. இந்த சப்போட்டா பழத்தோலில், உடலில் காயங்களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப்பொருட்கள் நிரம்பியிருக்கின்றன.. அதேபோல, உடலை தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் குணமும் சப்போட்டா தோலுக்கு உண்டு.
ஆப்பிள் பழத்தை தோலுடன் ஜூஸ் தயாரிக்க வேண்டும். சாப்பிடும்போதும் தோலுடன் சாப்பிட வேண்டும். இதனால், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A, C, சத்துக்கள் போன்றவை முழு நார்ச்சத்துக்களுடன் நமக்கு கிடைக்கும். இந்த சத்துக்கள் எல்லாமே இதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் அவசியமானவை.. ஆப்பிளிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களை நாம் அப்படியே சாப்பிடும்போது, புற்றுநோய் செல்களும் தடுக்கப்பட்டுவிடும்..
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள், ஆப்பிளை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது.. ஆப்பிளை ஜூஸ் தயாரித்து குடிக்கும்போதுதான், சத்துக்களும் வீணாகி, ரத்த சர்க்கரை அளவும் உடனே எகிறிவிடும்.
கிவி பழங்களை பொறுத்தவரை, பிளேட்லெட்டுகளை அதிகரிக்க செய்யக்கூடிய சக்தி கொண்டவை. பலரும் இந்த பழத்தின் தோலை நீக்கிவிடுவார்கள். ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது கிவியின் தோலில்தான்.. எனவே, தோலுடன் சாப்பிட வேண்டும்.
மாம்பழம்: திராட்சையையும் தோலுடன் சாப்பிட வேண்டும். கொய்யா பழங்களையும் ஜூஸ் தயாரித்து குடிக்காமல், அப்படியே முழு பழமாக கடித்து சாப்பிட வேண்டும். கொய்யாவை போன்ற சிறந்த பழம் வேறில்லை.. சரும வறட்சி முதல் ஏகப்பட்ட உடல்நல பிரச்சனைகளை கொய்யா தடுக்கக்கூடியது. ரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்கக்கூடிய தன்மை மாம்பழம் தோலுக்கு உண்டு.. எனவே மாம்பழங்களை தோலுடன் சாப்பிடலாம்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டுவலி பாதிப்பு ஏற்படும். இவர்களுக்கு வாழைப்பழத்தோல் சிறந்த மருந்தாகும்.. கால்சியம், செலினியம் போன்ற தாதுக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. இந்த செலினியம், யூரிக் அமிலத்தை சமப்படுத்தும் ஆற்றல் கொண்டவை...
சர்க்கரை நோய்: அதுமட்டுமல்ல, இதுபோன்ற பழங்களை ஜூஸ் தயாரிக்கும்போது, பால், சர்க்கரை, குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்.. இவைகள் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல்பையே குலைத்துவிடுவதுடன், செரிமானக் கோளாறையும் ஏற்படுத்திவிடும். அதனால், பழங்களை நன்றாக கழுவி, அவைகளை தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது.
சர்க்கரை நோயாளிகள், மேற்கண்ட பழங்களில் ஆப்பிள், கொய்யா தவிர்த்து, மற்ற பழங்களை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications