Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புற்றுநோய் டேஞ்சர்.. இதை மட்டும் செய்யாதீங்க.. ரீஃபைண்ட் ஆயிலில் சமைக்கறீங்களா? அப்ப நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரீஃபைண்ட் எண்ணெய் என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நம்முடைய உடலுக்கு நல்லதா? ரீஃபைண்ட் எண்ணெய்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அளவுகோல்கள் என்னென்ன?

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நல்லதா? கெட்டதா? என்ற குழப்பம் எப்போதுமே இருந்து வருகிறது.. ஆனால், ரீஃபைண்டு எண்ணெய்கள், உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்வதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Can we Use Refined oil and whats the Excellent Benefits of refined oil how much refined oil usage is good for Health

காரணம், ரீஃபைண்டு எண்ணெய் என்கிற பெயரில் விற்பனைக்கு வரும் சில பிராண்டுகள், அபாயகரமான ரசாயனங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிக்கப்பட்டது என்றாலே அமிலத்துடன் அல்லது காரத்தால் சுத்திகரிக்கப்படுவதாக கருதப்படுகிறது..

சுத்திகரிப்பு : வடிகட்டப்படலாம் அல்லது டியோடரைஸ் செய்யப்படலாம் என்றாலும், ஹெக்ஸேன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தியே சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன..

இந்த மோசமான ரசாயனம்தான், இன்சுலின் செயலிழப்பை மோசமாக்கும். உடலை இன்னும் பருமனாக்கும். எனவே, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களால் நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய நோய் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவிடும். சில நபர்களுக்கு செரிமான கோளாறுகளையும் உண்டாக்கிவிடும்.

கலோரிகள்: ரீஃபைண்ட் எண்ணெய்யில், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இதயநோய்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ரீஃபைண்ட் எண்ணெய்யில் கலோரிகளும் அதிகமாக உள்ளது..

அதிலும், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், இதனை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் நமக்கு எவ்வளவு ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது பல முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள்..

எலும்புகள்: அதேசமயம், உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணெய்யின் ஊட்டச்சத்தும் அவசியமானது.. காரணம், ஆரோக்கியமான தோல், முடி மற்றும் எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. எனவே, ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை எடுத்துக் கொள்ளலாம்.. ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் இந்த சுத்திகரிப்பு எண்ணெய்யை பயன்படுத்துவதே தீங்கு உண்டாக்கிவிடும்.

ஒருவேளை உடல்நல கோளாறுகள் இருந்தால், இந்த எண்ணெய்யின் அளவையும் குறைத்து கொள்ளலாம். அதனால், சரியான பிராண்டு எண்ணெய்களை உபயோகப்படுத்துவதுடன், வெறும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இருந்து மட்டுமே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறலாம். எனவே 2 ஸ்பூனில் சமையலை செய்ய பழக்கப்படுத்திக் கொள்வதுடன், பெரும்பாலும் வேகவைத்த காய்கறிகளை உட்கொள்ளவும் பழக்கப்படுத்தி கொள்ள சொல்கிறார்கள்.

அறிவுறுத்தல்: கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை ரசாயனங்கள் கலந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விட மிகவும் ஆரோக்கியமானவை என்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை என்றும் கருதப்படுகிறது.

அதேபோல, பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+