Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புற்றுநோய்க்கு இனி ‛குட்பை’.. பிறவி கண்பார்வை குறைபாடு, பக்கவாதத்திலும் இனி விடுபடலாம் - குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

புடாபெஸ்ட்: ‛‛வரும் 2030ம் ஆண்டுக்குள் புற்றுநோய், பிறவி கண்பார்வை குறைபாடு மற்றும் பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த முடியும்'' என்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் புற்றுநோய், பிறவி கண்பார்வை குறைபாடு மற்றும் பக்கவாதத்துக்கு முற்றிலுமாக ‛குட்பை'சொல்லும் நிலை வர உள்ளது.

மருத்துவ துறை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வருகிறது. ஆனாலும் கூட குறிப்பிட்ட நோய்களை முற்றிலுமாக குணப்படுத்தும் நோய்களுக்கு மாத்திரை, மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

cancer health blidness

அதில் புற்றுநோய், கண்பார்வை இல்லாமை, பக்கவாதம் உள்ளிட்டவையும் அடங்கும். இந்நிலையில் தான் புற்றுநோய், கண்பார்வை இல்லாமை, பக்கவாதம் உள்ளிட்டவற்றை 2023ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டை சார்ந்த மருத்துவ மாணவர்கள் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கிறிஸ் கிறைசாந்தோ எனும் அந்த மாணவர் கூறுகையில், ‛‛புற்றுநோய், கண்பார்வை இல்லாமை, பக்கவாதம் உள்ளிட்டவற்றை 2030ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க முடியும். 2030 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் மூன்று நோய்களின் பட்டியலில் புற்றுநோய், கண்பார்வை இல்லாமை மற்றும் பக்கவாதம் உள்ளிட்டவை உள்ளன.

இதில் முதலில் புற்றுநோயை எடுத்து கொள்வோம். இதற்கு கீமோ தெரபி சிகிச்சை தான் அழிக்கப்படுகிறது. இனி கீமோ தெரபி சிகிச்சை வேண்டாம்.அதற்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் mRNA புற்றுநோய் தடுப்பூசிகளை பயன்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. Personalised தடுப்பூசிகள், ஜெனிட்டிக் எடிட்டிங் (Genetic Editing)மற்றும் சிறிய அளவிலான மருந்துகளின் ஆய்வுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் புற்றுநோய் விரைவாக குணமாகும். இது ஆபத்தானதாக இருக்காது என பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது கண்பார்வை இல்லாமை பிரச்சனையை எடுத்து கொள்ளலாம். ஜென் எடிட்டிங் (Gen Editing) மற்றும் ஸ்டெம் செல்கள் மூலம் விழித்திரை நோய்கள் உள்ள நோயாளிகள் பார்வையை மீண்டும் பெறுகிறார்கள். இது பார்வையற்றவர்களை மீண்டும் பார்க்க வைக்கிறது. மேலும் பிரைம் எடிட்டிங்(Prime Editing) என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் பரம்பரை சார்ந்த கண்பார்வை ஏற்படும் மரபணுவை மாற்ற முடியும். 3வது நாம் பார்ப்பது பக்கவாத பிரச்சனை. சீனாவில், முழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் Combo of Brain Implants and Spinal cord Stimulation உள்ளிட்டற்றை முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார். இது புற்றுநோய், கண்பார்வை குறைபாடு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

இதனை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். ஒருவர், ‛‛அறிவியல் எப்போதும் நல்லவற்றையே செய்து வருகிறது'' என்று பலரும் புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொருவரோ, ‛‛புற்றுநோயை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் மருந்து துறையினர் இருக்கும் இது புற்றுநோய்க்கு மருந்தாக இருக்காது. ஆனால் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ''என தெரிவித்துள்ளார்.

இன்னொருவரோ, ‛‛2030ம் ஆண்டுக்குள் பிறவி கண்பார்வையை குணப்படுத்த முடிந்தால் அதே மரபணு சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனையையும் குணப்படுத்துவார்களா? இது நடக்கும் பட்சத்தில் கண் மருத்துவர்கள் தேவையில்லாத நிலை ஏற்படுமே'' என இந்த ஆய்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படுதில் உள்ள பிரச்சனையை எடுத்துரைத்தார்.

நம் நாட்டில் புற்றுநோய் தொடர்பாக ‛தி குளோபல் கேன்சர் அப்சர்வேட்டரி (Globocan) 2022 என்ற ஆய்வில் முக்கிய விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛நம் நாட்டில் புற்றுநோய் முக்கிய பிரச்சனையாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் உலகளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இளைஞர்களை விட முதியவர்களுக்கு தான் புற்றுநோய் பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் மருத்துவ மாணவரின் இந்த தகவல் நம் நாட்டுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+