5, 6 இலை தான்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க.. அப்புறம் கறிவேப்பிலையை தூக்கி போடமாட்டீங்க!
சென்னை: உணவுப் பொருளுக்கு மணம் மட்டுமே கொடுக்க கறிவேப்பிலையை பயன்படும் என பலரும் நினைக்கிறோம். ஆனால், கறிவேப்பிலையில் இருக்கும் பல சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதாம். அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் உள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
காய்கறி கடைக்கு போனால் கண்டிப்பாக திரும்பி வரும் போது கையில் கறிவேப்பிலை இல்லாமல் வர மாட்டோம்.. காய்கறி கடைக்காரரிடம் கொஞ்சம் கறிவேப்பிலையை சண்டையிட்டு வாங்காமல் வந்தால் காய்கறிகள் வாங்கிய திருப்தியே இருக்காது... இன்னும் சில இல்லத்தரசிகளே வீட்டருகே இருக்கும் அண்ணாச்சி கடையில் சண்டை போடாத குறையாக கறிவேப்பிலையை வாங்கி வந்து விடுவார்கள்..

இப்படி வாங்கி வரும் கறிவேப்பிலையும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கும். குறிப்பாக குழம்பு தாளிக்கும் போதும் கறிவேப்பிலையை பயன்படுத்துவண்டு. குழம்பின் சுவை மற்றும் மணத்தை தூக்கி காட்டுவதற்காக கறிவேப்பிலையை பலரும் பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். இதனால், சாப்பிடும் போது கையில் கிடைக்கு கறிவேப்பிலையை அப்படியே தட்டு ஓரம் தூக்கி வைத்து விடுவார்கள்...
ச்சே.. கடையில் படாத பாடு பட்டு வாங்கி வந்ததது நம்மளை இப்படி தூக்கி தூர போடுவதற்காகத்தானா.. என்று வாயிருந்தால் கறிவேப்பிலையே நினைத்து விடும். அப்படி குழம்பை சாப்பாட்டில் ஊற்றியவுடன் முதல் வேளையாக கறிவேப்பிலையை தூக்கி ஓரம் வைத்த பிறகுதான் அடுத்து சாப்பாட்டில் பலரும் கை வைப்பார்கள். ஆனால், கறிவேப்பிலையை அப்படி தூக்கி வைப்பதை விட்டு விட்டு தினமும் 5-6 இலைகள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஊட்டசத்து நிபுணர்கள்.
ஏனெனில் கறிவேப்பிலையில் உடலுக்கு தேவையான சில சத்துக்களும் உள்ளதாம். அதாவது, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் 5-6 கறிவேப்பிலைகள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறதாம். சரி கறிவேப்பிலையால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்.
* கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. தலை முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர இது வளர செய்கிரது. கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இளநரை ஏற்படுவதை தவிர்க்கிறது.
* கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க உதவுகின்றன. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாப்பிடுவதால் கண்பார்வை திறன் அதிகரிக்கும். அது மட்டும் இன்றி வயது சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
* கறிவேப்பிலையால் வயிறு சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்படுவதும் தவிர்க்கப் படுகிறதாம். வாய்வு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கவும் கறிவேப்பிலை உதவும்.
* கறிவேப்பிலையில் உள்ள உடல் பருமன் எதிர்ப்பு மற்றும் கொழுப்பை குறைக்கும் கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால், உடல் பருமன் ஏற்படுவதை தவிர்க்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications