Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆண்களை விட பெண்களுக்கே அதிக ஆபத்து.." புத்தாண்டில் நீங்கள் செய்யும் ஆக சிறந்த செயல்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிகரெட் பிடிப்பது என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். சிகரெட் பிடிப்பது பல்வேறு வழிகளில் நமது மரணத்திற்கு வழி வகுக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சிகரெட் பிடிப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

புகையிலையை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

smoking science


சிகரெட்

இதன் காரணமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்பது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மெல்லக் குறைந்தே வருகிறது. அதேநேரம் இன்னும் சிகரெட் ஆபத்தில் பல கோடி பேர் இருக்கவே செய்கிறார்கள். மேலும், சிகரெட் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆய்வுகளும் கூட ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே சிகரெட் அதிக ஆபத்தை விளைவிப்பது தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கே ஆபத்து அதிகம்:

அதாவது ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள். அதேநேரம் பெண்கள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் தங்கள் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு சிகரெட்டும் நமது வாழ்நாளில் 11 நிமிடங்களைக் குறைப்பதாகக் கூறப்பட்டு இருந்த நிலையில், உண்மையில் அதை விட அதிகளவு நம்மை பாதிப்பது இந்த புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆய்வாளர்கள், புத்தாண்டு முதல் இந்த உயிருக்கு ஆபத்தான புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எச்சரிக்கை:

இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "புகைபிடிப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை இழக்கிறார்கள்.. புகைபிடிக்கும் பழக்கம் தான் நமது ஆரோக்கியமான வாழ்வுக்கு முதல் எதிரி. இது உயிர் வாழும் காலத்தைக் குறைப்பது மட்டுமின்றி பல மோசமான நோய்ப் பாதிப்புகள் ஏற்படவும் கூட காரணமாக இருக்கிறது" என்றனர்.

smoking science


சிகரெட் பிடிப்பது ஆபத்தானது எனத் தெரிந்தாலும் சில தொடர்ந்து பிடிக்கிறார்கள். இளைஞராக இருக்கும் போது சிகரெட் பிடிக்கலாம்.. வயதான பிறகு விட்டுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி விடுவது அவ்வளவு ஈஸி இல்லை. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிகரெட் பழக்கத்தை விடுங்கள். மேலும், ஒரு ஆண்டோ அல்லது ஆறு மாதமோ எவ்வளவு சீக்கிரம் நீங்கள் புகைபிடிப்பதை விடுகிறார்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் ஆயுள் அதிகரிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


சிறந்த பரிசு

இது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் சாரா ஜாக்சன் கூறுகையில், "புகைபிடித்தல் உயிருக்கு ஆபத்து என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால், அதன் ஆபத்தைப் பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.. ஒருவர் சராசரியாக 10 ஆண்டுகள் புகைபிடிக்கிறார் என்றால் அவர் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார் என அர்த்தம்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், உலக சுகாதார அமைப்பும் கூட புகையிலையை என்டமிக் எனப்படும் மிகப் பெரிய பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களாகவே அறிவித்துள்ளது. புகையிலை பழக்கம் காரணமாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 80 லட்சம் பேரைக் கொல்வதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது ஒட்டுமொத்தமாக கொரோனா ஏற்படுத்திய 70 லட்சம் மரணங்களை (உலக சுகாதார அமைப்பின் தகவல்) விட அதிகமாகும். எனவே, புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவது என்பது நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தரும் ஆகச்சிறந்த பரிசாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+