லவங்கப்பட்டை டீ.. ஊளைச்சதை குறைய இந்த பிளாக் காபி போதுமே? வெயிட் லாஸுக்கு சூப்பர் ஹெல்த் டிரிங்க்ஸ்
சென்னை: உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது முக்கியமாகிறது.. அதேசமயம் நாம் குடிக்கும் பானங்களின் மூலம் உடல் எடைகுறைப்பில் மாற்றத்தை காணலாம். இதோ குட்டி டிப்ஸ்.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க, பச்சை காய்கறிகள், பழங்கள், போதுமான தூக்கம், முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான சூழ்நிலை, நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவைதான் அடிப்படை விஷயமாக பார்க்க வேண்டும். எனினும், இதுபோன்ற காபி, டீ போன்ற பானங்களும், எடை குறைப்பதற்கு தூண்டுகோலாய் உதவி புரிகின்றன.

வழக்கமாக டீயை பொறுத்தவரை, இஞ்சி டீ, சுக்கு குடிப்பார்கள்.. ஆனால், இஞ்சி, துளசி இரண்டையும் பயன்படுத்தி டீ குடிக்கலாம். அதேபோல, லவங்கப்பட்டையில் டீ போட்டு குடித்தால் ஏகப்பட்ட நன்மை கிடைக்கும். இதில் நார்ச்சத்து உள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.. தினமும 2 வேளை லவங்கப்பட்டை டீ குடிப்பதனால், அன்றைய தினம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் எளிதில் பெற முடிகிறது..
கருப்பு மிளகு: மிளகு டீ தயாரித்து குடித்தால் அதைவிட நன்மை தரும்.. கருப்பு, வெள்ளை மிளகு இந்த இரண்டுமே அதிக சத்துக்கள் கொண்டவை.. கருப்பு மிளகில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின்K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பு உள்ளன. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது எப்போதுமே மிளகுதான். அந்தவகையில், உடலிலுள்ள நச்சுக்களை அகற்றி, கேன்சரிலிருந்து விடுவிக்க தூண்டுவது இந்த மிளகுதான்.
மிளகில் பைப்பரின் என்ற சேர்மம், உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
வெள்ளை மிளகு: வெள்ளை மிளகுகளும், நார்ச்சத்து அதிகம் நிறைந்தவையே. எனவேதான் ஆயுர்வேதத்தில், முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இந்த வெள்ளை மிளகு.. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் கலந்து, கொதிக்கவிட விட்டு, அது பாதியாக சுண்டியதும், எலுமிச்சை சாறு, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
செரிமான மண்டலம் வலுவடையும். வெறுமனே மிளகு கொதிக்க வைத்து குடித்தாலும் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்.. கலோரிகளும் எரிக்கப்படும்.
காபியை பொறுத்தவரை, பிளாக் டீ, பிளாக் காபி இரண்டையுமே தாராளமாக குடிக்கலாம்.. உள்ளுறுப்புகளுக்கு இந்த காபி நன்மை தரக்கூடியது. கல்லீரலை பாதுகாப்பதுடன், கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்புகளையும் கரைக்க பிளாக் காபி உதவுகிறது. ஒருநாளைக்கு 2 பிளாக் காபி குடித்து வந்தாலே, கலோரிகள் குறைய துவங்கும் என்கிறார்கள்.
பசி உணர்வு: இதற்கு காரணம், காபியில், காஃபின் என்ற பொருளானது, மெட்டாபாலிசத்தை அதிகரிக்க தூண்டுகிறது. ஆற்றலை அதிகரிக்க செய்து, பசி உணர்வு தெரியாமலும் வைக்கிறது.. சாப்பிட்டு முடித்ததுமே, நிறைய பேர் பிளாக் காபி குடிப்பதும் இந்த காரணத்துக்காகத்தான். இதனால் கெட்ட நீர் வெளியேறி உடல் எடையும் குறையும் என்று ஆய்வுகளும் மெய்ப்பித்துள்ளன. நீர்ச்சத்தை குறைக்க உதவுவதுடன், சிறுநீரை வெளியேற்றவும், இந்த பிளாக் காபி உதவுகிறது.












Click it and Unblock the Notifications