கோதுமையில் எண்ணிலடங்கா சத்துக்கள்.. சப்பாத்தி மாவு நல்லதா? இப்படி இருந்தாலே அது "டூப்ளிகேட் மாவு"
சென்னை: கோதுமை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? இந்த கோதுமை மாவு, கலப்படமில்லாதது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சப்பாத்தி மாவு சாப்பிட்டால் அலர்ஜி வருமா? சுருக்கமாக பார்க்கலாம்.
கோதுமை உடலுக்கு நல்லது.. இந்த கோதுமை மாவு ரத்தத்தினை சுத்தப்படுத்தக்வடியது.. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.. உடல் எடையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் தன்மை இந்த கோதுமைக்கு உண்டு.. எனவே, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஊட்டச் சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது. இது செரிமானத்தையும் எளிதாக்குகிறது. அத்துடன், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியான விகிதத்தில் வைத்திருந்து நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது.
புற்றுநோய்: ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளதால், புற்றுநோய்க்கு எதிராகவும் கோதுமை செயல்படுகிறது.. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கோதுமை தவிட்டை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டதில், இரண்டிலிருந்தும் ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைப்பதாகவும், இது மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைத்திருப்பதாகவும் தெரியவந்தது.
கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகம் உள்ளதால், சரும ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாக அமைகிறது.. தோல் சுருக்கங்களை முன்கூட்டியே தடுக்கிறது.. ஆனால், தவிடு நீக்கப்படாத கோதுமையை சாப்பிட்டால் மட்டுமே, செலினியத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு செல்லும்..
நரம்பு மண்டலம்: கோதுமையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு. நரம்பு மண்டலங்கள் வலுவாகி, பக்கவாதம் பாதிப்பு குறைவதாக தெரியவந்துள்ளது.. இதனால், இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
அதேபோல அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை செரிமாணம் ஆவதற்கும் நீண்ட நேரம் பிடிக்கும். இதனால் சிலருக்கு கோதுமை செரிமாணம் ஆகாமல், வீக்கம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
தவிர்க்கலாம்: இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.. அதேபோல, கோதுமையிலுள்ள க்ளுட்டன், சிலருக்கு அலர்ஜியை தரலாம் என்பதால், இதையும் மருத்துவரிடம் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி கோதுமை அலர்ஜி என்றால், சப்பாத்தி மாவில் செய்யப்பட்ட உணவு, பிஸ்கட், பிரட்டுகள், பிரட் கிரம்ஸ் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது... பாஸ்பரஸ், காப்பர், ஃபோலேட் ஃபோலிக் அமிலம் என பல சத்துக்கள் இருந்தாலும், முழு கோதுமையை சுத்திகரிக்கும்போது, அதிலுள்ள பல சத்துக்கள் நீக்கப்படுகின்றன. எனவே நாம் பயன்படுத்தும் கோதுமை மாவு தூய்மையானதா? என்பதை தெரிந்துக்கொண்டு வாங்க வேண்டும்.
கலப்பட மாவு: உதாரணத்துக்கு ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் கோதுமை மாவு கலக்கவேண்டும். கலப்படம் கலந்த மாவு என்றால், அதிக அளவு தவிடு நீரில் மிதக்கும். அதேபோல, 1 கிண்ணத்தில் 2 ஸ்பூன் கோதுமை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிட வேண்டும். மாவில் குமிழ்கள் வந்தால் அது கலப்பட மாவு என்று அர்த்தம். ஒரு காகிதத்தில் கோதுமை மாவை தூவி தேய்க்கும்போது, பேப்பரின் நிறம் மாறினால், அதுவும் கலப்படம் மாவு என்று அர்த்தமாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications