தமிழகத்திற்குள் மீண்டும் வந்தது கொரோனா.. சென்னையில் 3 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் 3 பேரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டிய கொரோனா மீண்டும் தமிழகத்தில் கால் பதித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. தொற்று பாதிப்பு பெரிதாக யாருக்கும் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில்தான் தற்போது மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெண் உள்பட 3 பேருக்கு தொற்று
32 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் உள்பட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல் நலம் நன்றாக இருப்பதாக பொது சுகாதரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். உலகையே மிரட்டிய கொரோனா மீண்டும் தமிழகத்தில் கால் பதித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் தற்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும், முன்பு போல் வேகமாக பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் மக்கள் கொரோனா பரவல் பற்றி பெரிதாக அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஒரு சில வாரங்களிலேயே உலகம் முழுவதும் வியாபித்தது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் திண்டாடின. இந்தியாவிலும் 2020 மார்ச் மாதம் நுழைந்த கொரோனா மக்களை படாத பாடு படுத்தியது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு போடபட்டது. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதனால், தொழில் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவும் என்பதால், முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த முடியாமல் பல மாதங்கள் உலக நாடுகள் கையை பிசைந்த நிலையில், தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகே தொற்றின் வீரியம் குறைந்தது.
மக்கள் அச்சம்
வேக வேகமாக தடுப்பூசி போடப்பட்டு கொரோனா வைரஸ் மட்டுப்படுத்தப்பட்டது. அதன்பிறகே கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கி ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டது. 2022 க்கு பிறகு கிட்டதட்ட முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில், மக்கள் கொரோனா வைரசை மறக்கவே தொடங்கிவிட்டனர். அவ்வப்போது வைரஸ்கள் உருமாறி பரவினாலும் கூட முதல் முறை அளவுக்கு வீரியமாக இல்லை.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பாதிப்பு எதுவும் இல்லை. எனினும், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை தொடர்ச்சியாக மருத்துவத்துறை கண்காணித்தது. இந்த நிலையில்தான் சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது மக்களுக்கு சற்று அச்சத்தை கொடுத்துள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications