கொத்து கொத்தா தலைமுடி கொட்டுதா? நீளமான, பளபளன்னு முடி வேணுமா? அப்ப கறிவேப்பிலை போதுமே.. சூப்பர் டீ
சென்னை: நீளமான தலைமுடி வேணுமா? அப்ப கறிவேப்பிலை மட்டும் போதுமே.. தலைமுடி உதிர்வு அப்படியே கட்டுக்குள் வந்துவிடும். எப்படி தெரியுமா?
எப்போதுமே நமது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஜிங்க் சத்து குறைவாக இருந்தால், தலைமுடி வலுவாக இல்லாமல் இருக்கும். புரோட்டீன் குறைவாக இருந்தாலும், நம்முடைய தலைமுடியின் செல்களின் வளர்ச்சியை பாதிக்கும்.. வைட்டமின் D குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சியை தடைபடுத்திவிடும்.

இதேபோல, வைட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகரிக்கிறது..
கொழுப்பு அமிலம்: வைட்டமின் E அடங்கிய உணவை எடுத்துக்கொள்ளும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவையாக உள்ளன. எனவேதான், நம்முடைய உணவில், வைட்டமின் C, B, E போன்ற சத்துக்களும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்..
அதேபோல, கறிவேப்பிலையை ஏதாவது ஒரு வடிவில் உணவில் சேர்த்து கொள்வதால் நல்ல பலன் கிட்டும்.. முருங்கைக்கீரையை போலவே இரும்புச்சத்து நிறைந்தது கறிவேப்பிலை. இதில் பொடி போல அரைத்து கொண்டு, உணவில் சேர்த்து கொள்ளலாம்.
டீ தயாரிக்கலாம்: அல்லது வெறுமனே நாலைந்து இலையை கழுவி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.. அல்லது டீ போல தயாரித்து குடிக்கலாம்.. இரவு ஒருபாத்திரத்தில், கறிவேப்பிலையை கழுவி போட்டு ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வாரத்திலேயே தலைமுடி கொட்டுவது நின்றுவிடும்.
அதேபோல, சிறிது கறிவேப்பிலையை விழுதாக அரைத்து, தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால், தலைமுடிக்கு சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி உதிர்வு கட்டுப்படும். தலைமுடியிலும் பளபளப்பு காணப்படும்.
எண்ணெய்: கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அல்லது கறிவேப்பிலையை விழுதாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சத்தம் அடங்கியதும், இந்த எண்ணெய்யை ஆறவைத்து, எடுத்து வைத்து கொண்டு, தலைக்கு தேய்க்க விட வேண்டும். ஒருமணி நேரம் கழித்து, மிதமான ஷாம்புவை கொண்டு கழுவி வந்தால், தலைமுடி கொட்டுவது கட்டுப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications