தேற்றான்கொட்டை.. தேடி தேடி நோயை ஓட்டும் சூப்பர் மூலிகை.. சர்க்கரை நோயாளி தேற்றான் கொட்டை சாப்பிடலாமா
சென்னை: கொழுப்புகளை கரைக்கக்கூடிய தன்மை கொண்ட தேற்றான் கொட்டைகள், பலவீனமானவர்களுக்கு பலத்தை அள்ளி தரக்கூடியது.. இப்படி வித்தியாசமான அம்சங்களை பெற்றிருக்கும் தேற்றாங்கொட்டை மூலிகையை பற்றி பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் தனிப்பெரும் இடத்தை பெற்றிருப்பவை இந்த தேற்றான் கொட்டைகள். தேற்றான் மரத்தில் கிடைக்கும் தேற்றான் கொட்டைகள், கடினமானவை.. எளிதில் உடைபடாது. அதனால், ஊறவைத்து அதற்கு பிறகே அனைத்து உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியும்.

கொட்டைகள்: இந்த கொட்டைகள் மட்டுமல்ல, இதன் மரத்தின் பழங்களும் மருத்துவ நன்மையை தரக்கூடியது.. நுரையீரலுக்கு பலத்தை தந்து, சளியை விரட்டக்கூடியது. கபம் சேருவதை தடுக்கிறது. வயிறு கோளாறுகளையும், காயங்களையும் ஆற்றக்கூடிய சக்தி இந்த தேற்றான் பழங்களுக்கு உண்டு.. அதேபோல, கண் நோய்களுக்கான சிகிச்சையில் இந்த பழங்களின் பங்கு அபரிமிதமானது. இன்றும்கூட, சிறுநீரக தொந்தரவுகளுக்கு, தேற்றான் பழங்கள் மருந்தாகின்றன.
குளம், குட்டை, ஊருணிகள் போன்றவற்றில் கலங்கின நீரை தெளியவைக்க இந்த தேற்றாங்கொட்டை பயன்படுத்தப்படும். சேறும் சகதியுமான நீரில், இந்த கொட்டையை இடித்து போட்டுவிட்டால், அந்த தண்ணீர் தெளிந்து சுத்தமாகிவிடும். இது இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படுகிறது.
குடிநீர்: இதனால், அழுக்குகள், கிருமிகள் நீங்கி சுத்தமான குடிநீர் கிடைத்துவிடும். நாட்டு மருந்து கடைகளில் தேற்றான் கொட்டைகள் கிடைக்கின்றன.. தேற்றான் கொட்டை பவுடர்களும் கிடைக்கின்றன.
உடலுக்கு பலத்தை தரக்கூடியது இந்த தேற்றான்கொட்டைகள்.. நீண்ட நாள் படுக்கையில் கிடந்தவர்கள், அல்லது நோஞ்சான் போன்ற மெல்லிய உடல்வாகு கொண்டபவர்கள், உடலில் வலு இல்லாதவர்கள், இந்த தேற்றான்கொட்டையை கஷாயம் போல வைத்து குடிக்கலாம். உடலிலுள்ள உஷ்ணமும் நீங்கும். ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த இந்த தேற்றான் கொட்டை, பால்வினை நோயால் ஏற்படும் புண்களையும் ஆற்றக்கூடியது.. இதற்கென்றே தேற்றான்கொட்டை சூரணம் விற்கப்படுகிறது.
ரத்த நாளங்கள்: கொழுப்பை கரைத்து வெளியேற்றக்கூடியது இந்த தேற்றான் கொட்டைகள்.. குறிப்பாக, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கிறது.. இதனால் ரத்த ஓட்டமும் சீராவதுடன், உள் உறுப்புகளிலுள்ள அழற்சிகளும் நீங்கிவிடும்.
அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் பார்வை, கண் நரம்பு பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு தேற்றான்கொட்டையை பவுடர் செய்து, கஷாயம் வைத்து குடிப்பதால், நரம்பு மண்டலம் சீராகும்..
லேகியம்: நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் ஆகும்போது, தேற்றான்கொட்டை சூரணத்தில் டீ போல தயாரித்து, பால் சேர்த்து குடித்து வரலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கொட்டையிலிருந்து லேகியம் தயாரிப்பார்கள்.. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்... எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்தாக உட்கொள்ளும்போது பலன் பலமடங்காகும்.. ஆரோக்கியமும் தழைக்கும்.












Click it and Unblock the Notifications