அயிலை மீன் வாங்கறீங்களா.. கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப அயிலையை இப்படி செய்து பாருங்க.. இதய காவலன்
சென்னை: அயிலா மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? இந்த அயிலா மீனை வைத்து, கோலா கிரேவி எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகம் உள்ள மீன்களில் அயிலை மீனும் ஒன்றாகும்.. இதனால் இதய நோய்கள் வராமல், இதயத்துக்கு பாதுகாவலனாகவும் திகழ்கிறது இந்த அயிலை மீன்.. ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது..

அயிலா மீன்: ஒமேகா 3 என்ற சத்துக்கள் வழக்கமாக மீன்களில் இருக்கிறது என்றாலும், இந்த அயிலா மீனில் அளவுக்கு அதிகமாகவே நிறைந்துள்ளது என்கிறார்கள்.
இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம், நல்ல கொழுப்புகள், புரதச்சத்து என உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் இதில் உள்ளன.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக இந்த அயிலை கருதப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
அலர்ஜிக்கள்: இப்படி சத்துக்கள் பலவிருந்தாலும்கூட, மீன் அலர்ஜி இருப்பவர்கள், இந்த அயிலை மீனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அயிலை மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுக்கலாம்.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் D சத்துக்கள் இந்த மீனில் உள்ளதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மீனை நிறையவே சாப்பிடலாம் என்கிறார்கள்.
இந்த மீனை பிடித்த அன்றே சமைத்து சாப்பிட்டுவிட வேண்டும்.. பதப்படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருப்பதால்தான், அயிலைக்கு எப்போதுமே டிமாண்டு இருக்கிறது.. அதனால்தர்ன, தமிழகத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டாலும், கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறதாம்..
வெண்டைக்காய்: வழக்கமான மீன் குழம்பு போல் இதை செய்யாமல், இதில் வெண்டைக்காயை சேர்த்தும் சிலர் சமைப்பார்கள்.. ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை வதக்க வேண்டும். பிறகு, வெங்காயம், தக்காளி இரண்டையும் விழுதாக அரைத்து ஊற்றி வதக்க வேண்டும்.
இதில், மஞ்சள் தூள், உப்புத்தூள், மிளகாய்த்தூள், மல்லிப்பொடி, மீன் மசாலா தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசலையும் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை கொட்டி கிளறி கொதிக்க வைக்க வேண்டும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவினால், வெண்டை மீன் குழம்பு ரெடி. இதே குழம்பை தேங்காய் பால் ஊற்றாமலும் செய்யலாம்.
அயிலை கோலா: இந்த அயிலாவை வைத்து, கோலா மீன் செய்வார்கள்.. அதாவது, மீனை சுத்தம் செய்து, அதில், தயிர், மஞ்சள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் பட்டை, லவங்கம், கிராம்பு, கருப்பு மிளகு, வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆற வைத்து, விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு, ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதை கொட்டி, மசாலாக்களுடன் கலந்து வைத்துள்ள மீன்களையும் சேர்த்து, குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். இறுதியில், கொத்தமல்லி தூவி இறக்கினால் அயிலை கோலா ரெடி. சப்பாத்தி, தோசை, இட்லிக்கு இது சுவையாக இருக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications