ஜஸ்ட் "ஒரே" ஜூஸ் போதும்.. சர்ருன்னு வெயிட் குறைஞ்சிடும் பாருங்க.. சர்க்கரை நோயாளிகள் இதை கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிப்பாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக சிலரால் ஒதுக்கப்படுகிறது கேரட்.. ஆனாலும், நாம் பயன்படுத்தும் கேரட்டில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், தலைசிறந்த 5 நன்மைகளை பற்றி பார்ப்போம்.. !

A, B6, K1, போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் சத்துக்களும் அடங்கியிருப்பவைதான் இந்த கேரட்.. புற்றுநோய் போன்ற பயங்கர நோய்களை முளையிலேயே அழிக்கக்கூடிய சக்தி இந்த கேரட்டுக்கு உண்டு.. அனைத்து வகையான புற்றுநோய் செல்களை இந்த கேரட் அழித்துவிடக்கூடியது..

 Do you know about Carrot and what are the Medicinal Benefits in the Carrot Juice

சர்க்கரை நோயாளிகள்: அதனால்தான், கீமோ தெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களை, இந்த கேரட் ஜூஸ் தொடர்ந்து சாப்பிட சொல்வார்கள். அதேபோல, இனிப்பு சுவை கொண்ட இந்த கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதுதான் ஆச்சரிய உண்மை. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. ஆனால், கேரட்டை "அளவோடு" சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த கேரட்டை சாப்பிடலாம்.. பீட்டா கரோட்டீன் உள்ளதால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை, இந்த கேரட் வெகுவாக குறைத்துவிடும்.. குறைவான கலோரிகளே இதில் உள்ளதால், கண்டிப்பாக சாப்பிடக்கூடிய உணவாக இது உள்ளது.

கேரட் என்றாலே கண்களுக்கே பிரதான நன்மை கிடைக்கும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையே நெருங்காது. பார்வையை கூர்மையாக்கிவிடக்கூடியது இந்த கேரட்டுகள். மாலை கண் நோய் எட்டிக்கூட பார்க்காது.. கேரட்டை ஜூஸ் தயாரித்து குடிக்கும்போது, சருமம் பளபளப்பாகும்.. அழகு கூடிவிடும்.. வயதான தோற்றமும் தள்ளிப்போடப்படும்.. இதய நோய்கள் வருவது தடுத்து நிறுத்தப்படும்..

எப்படியெல்லாம் சாப்பிடலாம்: கேரட்டை பெரும்பாலும் பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.. அல்லது ஜூஸ் போட்டு குடிப்பார்கள்.. அல்லது சாலட்களில் பயன்படுத்துவார்கள்.. அல்லது அல்வா செய்வார்கள்.. ஆனால், சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாகவே சாப்பிட சொல்கிறார்கள். இதனால் முழு சத்தும் வீணாகாமல் கிடைக்கும்.

அதிலும், சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் செய்து, காலையிலேயே வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டுமாம். இதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து குடித்தால், அன்றைய நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், குடல் புண்கள் ஏற்படாது.
கால்சியம்: அதேபோல, கேரட் ஜூஸில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஜூஸ் போல அரைத்து குழந்தைகளுக்கு தந்தால், கால்சியம் அதிகமாக உடலில் சேரும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தந்து மேம்படுத்தக்கூடியவை. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் + தேன் கலந்து சாப்பிட்டால், ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்பார்கள்..

ஆனால், இந்த கேரட்டில் சிலர் சட்னி செய்வார்கள்.. அதாவது வேர்க்கடலை கலந்த சத்து நிறைந்த சட்னி செய்யும்போது, சத்துக்கள் இரட்டிப்பாகும். அதாவது, ஒரு வாணலில் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் அதே வாணலிஎண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

சட்னி ரெடி: இப்போது மிக்சியில் வறுத்த வேர்க்கடலையுடன், வறுத்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.. கடைசியாக, வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால், வேர்க்கடலை + கேரட் சட்னி ரெடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+