“ஆ.ராசா வந்திருக்கார்.. கேட்டை திறங்க!” எ.வ.வேலு வீட்டின் முன் குவிந்த திமுகவினர்
சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த திமுக எம்பி ஆ.ராசா, வீட்டிற்குள் நுழை முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. ஆனால், நெடுஞ்சாலை துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் இன்று அதிரடி ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இதர இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை எ.வ.வேலுவின் வீட்டின் முன்பு திமுகவினர் அதிக அளவில் திரண்டனர். குறிப்பாக எம்பி ஆ.ராசா, எ.வ.வேலுவை சந்திக்க வந்திருந்தார்.
அப்போது சிறிது நேரம் காவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலில் இருந்து அவரது ஆதரவாளர்கள், "ஆ.ராசா வந்திருக்கார்.. கேட்டை திறங்க" என்று கூறினர். எ.வ.வேலுவை சந்திக்க அனுமதி உண்டா? என்று கேட்கலாம் என்று ஆ.ராசா பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை மட்டும் உள்ளே காவலர்கள் அனுமதித்தனர். இதையடுத்து உள்ளே ரெய்டு நடக்கும் பகுதிக்கு செல்லாமல், எ.வ.வேலு இருக்கும் பகுதிக்கு ஆ.ராசா சென்றிருக்கிறார்.
முன்னதாக திமுக வழக்கறிஞர் சரவணன் எ.வ.வேலுவை சந்திக்க வந்திருந்தார். ஆனால், அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
ரெய்டு பின்னணி
நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த வேலு, சாலை அமைக்க சவ்வூடு மண் அள்ளியதில் முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு குவிந்திருந்தது. குறிப்பாக திருப்பதி-சென்னை நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது பயன்படுத்தட்ட மண் அளவுக்கு மீறி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. திருத்தணியை ஒட்டியுள்ள பட்டாபிராபுரம் பகுதியில் உள்ள ஏரிகளில் 5 அடிக்கு மண் அள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் 12 அடி வரை மண் அள்ளியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இப்படி மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தோண்டி எடுத்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் தற்போது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications