மீன் வாங்குறீங்களா.. இந்த "சங்கரா"வை மறந்துடாதீங்க.. கானாங்கெளுத்தியையும் விட்றாதீங்க.. அபார நன்மைகள்
சென்னை: மீன்கள் என்றாலே மிகச்சிறந்த உணவாக கருதப்படும் நிலையில், எந்த மீன்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் தெரியுமா? பாதரசம் அதிகம் உள்ள மீன்கள் என்னென்ன தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, இந்த கெளுத்தி மீன்தான் மிகச்சிறந்த உணவு என்கிறார்கள். காரணம். 6.1 கிராம் கெளுத்தி மீனில், வெறும் 122 கலோரி அளவே இருப்பதால், இதை தாராளமாக சாப்பிடலாம்.. மீன்களில் கலோரி குறைவாக உள்ள மீனாக இந்த கெளுத்தி திகழ்கிறது.. இதிலுள்ள புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை தரக்கூடியவை..
உடல் எடை: கார்போஹைட்ரேட்கள் அவ்வளவாக இல்லை என்பதால், அடிக்கடி இந்த மீனை சாப்பிடலாம். விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீன், உடல் எடை குறைப்போருக்கு மிகவும் நல்லது. இதில் மத்தி மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.

அதேபோல, உடல் எடையை குறைக்கக்கூடிய மீன்களில் ஒன்று ஷீலா மீன். இதை ஷீலா மீன் அல்லது சீலா மீன் என்பார்கள்.. ஊளி மீன் என்றும் இதை சொல்வார்கள்.. மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஷீலா மீன்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்.. இதில் சங்கரா மீனும் அடக்கம்.. வாரத்தில் 2 நாளாவது சங்கரா மீனை பயன்படுத்தலாம். காரணம், குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை...
சங்கரா மீன்: உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு, இந்த மீன் நிவாரணம் தருகிறது.. இந்த மீனில் சோடியம் மிகக்குறைவாகவும், துத்தநாகம், பொட்டாசியம்,கால்சியம் போன்றவை மிதமாகவும் உள்ளதால், உடலுக்கு பாதுகாப்பை தருகின்றன.. மேலும், மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் குறைகின்றது.. அத்துடன் பார்கின்சன் நோயிலிருந்தும் மீட்கிறது.. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புரதங்கள் நிறைந்த இந்த கெளுத்தியை வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்.
அதுமட்டுமல்ல, சீல மீன்களில் பாதரசம் அதிக அளவில் கலந்திருக்கும். ஆனால், கெளுத்தியில் பாதசரம் அவ்வளவாக இல்லை என்பதால் தாராளமாக சாப்பிடலாம்.. ஆனால், பாதரசம் அதிகமுள்ள மீன்கள் என்னென்ன தெரியுமா?
கவனம் முக்கியம்: நச்சுத்தன்மை வாய்ந்த பாதரசம் நீரில் கலக்கும்போது அது மெத்தில் மெர்குரி என்று பாக்டீரியாவால் மாற்றப்படுகிறது.. நீரில் உள்ள மீன்கள் இந்த மெத்தில்மெர்குரியை உறிஞ்சுகின்றன.. நாம் மீன்களை சமைத்தபிறகும்கூட, மீன்களின் உடலில் பாதரசம் காணப்படுகிறது. அதனால், மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிநீரில் வேகவைத்தாலும், சில விஷப்பொருட்கள் முழுமையாக நீங்குவதில்லை. அதனால், மீன்களை கவனமாக பார்த்துதான் சாப்பிட வேண்டும்.
அதிகம் கழிவுகள் கலக்காத குறிப்பாக பாதரசம் இல்லாத மீன்வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இந்த பாதரசம் கொண்ட மீன்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை அதிகளவு பாதிக்கும்.. பார்வை குறைபாடு ஏற்படுத்தும். அதனால்தான், இதுபோன்ற மீன்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
கானாங்கெளுத்தி: அதற்கு பதிலாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீனை கர்ப்பகாலத்தில் சாப்பிடலாம். சுறா, சுரை, வாள்மீன், கிங் கானாங்கெளுத்தி போன்ற பெரிய மீன்களின் உடலில் பாதரசம் அதிக அளவில் இருக்குமாம். கலவா, கொடுவா, கீரை மீன் போன்றவற்றிலும் ஓரளவு இருக்கிறதாம். அதனால் இந்த வகை மீன்களை குறைவாக சாப்பிட வேண்டும், அதாவது மாதம் ஒருமுறை சாப்பிடலாம் என்கிறார்கள்.
ஆனால், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இதை சாப்பிடவே கூடாது. கெண்டை, பன்னா, கடல் இறால், கொண்டல், போன்ற வகை மீன்களில் பாதரசத்தின் அளவு, ஓரளவு குறைவாக இருக்கிறதாம். அதனால் இதை மாதம் 2 முறை சாப்பிடலாம். அப்போதுகூட, கர்ப்பிணிகள், குழந்தைகள் இதை சாப்பிடவே கூடாது.
விரால் மீன்: சால்மன், சங்கரா, வெளவால், நெத்திலி, விரால், கெளுத்தி, ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி, காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில், பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருப்பதால், இதை குழந்தைகளும், கர்ப்பிணிகளும் ஓரளவு சாப்பிடலாம்..!!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications