காரப்பொடி மீன்.. மீனை வாங்கினால் அயிரை மீனை அள்ளுங்க.. நுரையீரலின் நண்பன் இதை மட்டும் விட்றாதீங்க
சென்னை: மீன்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது.. அதிலும் சின்ன சின்ன மீன்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்தவை.. அதிலும் இந்த 2 வகையான மீன்கள், நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
அதில் ஒன்றுதான், காரப்பொடி மீன்கள்.. நுரையீரலுக்கு இந்த மீன்கள் மிகவும் நல்லது.. எவ்வளவு கடுமையான சளி பாதிப்பு இருந்தாலும், இந்த மீன் சாப்பிட்டால்போதும், சளிகள் கரைந்து காணாமல் போய்விடும்.

ஆஸ்துமா நோயாளிகள்: அதேபோல, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சரி, சுவாச பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் சரி, காரப்பொடி மீன் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது, மிளகு, பூண்டு நிறைய சேர்த்து குழம்பு வைத்து, சுடசுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டும்போது, மொத்த சளி, இரமல், காய்ச்சல் என அனைத்துமே தீர்ந்துவிடுமாம்,
அதேபோல, பாலூட்டும் தாய்மார்கள் இந்த மீனை அடிக்கடி சாப்பிடலாம்.. உடலுக்கு சத்து தரக்கூடியது என்பதால், உடலில் பலம் இல்லாதவர்களும் இநத் மீனை சமைத்து சாப்பிடலாம். இவர்களுக்கு மட்டும் நல்லெண்ணெய் சேர்த்து சமைக்க வேண்டும்.
அயிரை மீன்: அடுத்ததாக, அயிரை மீனையும் சளி, இருமல் தொந்தரவு நீங்க பயன்படுத்தலாம்.. பொதுவாக இந்த அயிரை மீனில், கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. ரத்த நாளங்களுக்கும் நல்லது... ரத்த ஓட்டத்தை தடையின்றி சீராக்குகிறது.. ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது..
ஹை-பிபி எனப்படும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்.. அயிரை மீனை சாப்பிடுபவர்களுக்கு, கண்களில் பெரிதாக பாதிப்புகள் வருவதுகிடையாது.. அவ்வளவு ஏன், மாலைக் கண் நோயையும்கூட தடுத்து நிறுத்திவிடும் இந்த குட்டி மீன்கள்.
அயிரை மீனிலுள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகளுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தருகிறது. இவ்வளவு இருந்தாலும், சளி இருமலை போக்குவதிலும் அயிரை பெரும்பங்கு வகிக்கிறது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் அயிரை மீன்கள் பதப்படுத்தப்பட்டு, கருவாடாக விற்கிறார்கள்.. சளி, இருமல், கக்குவான் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக அயிரை மீன் கருவாடு பயன்படுவதால், அம்மக்களிடையே இன்றும் பெரும் வரவேற்பு உள்ளது.. கருவாட்டின் விலையே 600 ரூபாய் என்றால், நீரோடைகளில் துள்ளி துள்ளி ஓடிவரும் இந்த அயிரை மீனுக்கு உள்ள மவுசை நீங்களே பார்த்துக்குங்க..!!
சத்துக்கள்: இவ்வளவு சத்துக்கள் இந்த மீனில் இருந்தாலும், ஒரு அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.. வாரத்துக்கு 2 முறைக்குமேல் சாப்பிட வேண்டாம் என்றும், குழம்பு வைத்து சாப்பிட்டால் மட்டுமே சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications