மீனு மீனேய்.. மிஸ் பண்ணாம இந்த "மீனை" வாங்கிடுங்க.. 5 ENT மேட்டரையும் உடனே நோட் பண்ணுங்க
சென்னை: மீன்கள் மீது கொள்ளை பிரியம் இருந்தாலும், அந்த மீன்களை எப்படி வாங்க வேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை.. இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளே சில டிப்ஸ்களை தருகிறார்கள்.
கோடை காலங்களைவிட, குளிர்காலங்களில் மீன் வாங்கும்போது அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.. அவை பதப்படுத்தப்பட்டதா? அல்லது புதிதாக கொண்டுவரப்பட்டதா? என்பதை கண்டுபிடித்து வாங்க வேண்டி உள்ளது.
மீன் வாங்க சென்றால், அந்த மீன்களில் நிறைய ஈக்கள் மொய்க்க வேண்டுமாம்.. அப்போதுதான், அது நல்ல மீன் என்கிறார்கள்.. மருந்துகளை தெளித்து வைத்திருந்தால், அதில், ஈக்கள் மொய்க்காது..

எப்படி வாங்குவது: அதேபோல, மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவந்தால், அதை தவிர்த்துவிடலாம்.. சதைப்பகுதி கல் போல தடிமனாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும். பழைய மீன்கள் என்றால், மீனின் கண்கள் வெள்ளை கலரில் இருக்குமாம்.. புதிய மீன்களின் கண்ணில் வெள்ளை தெரியாது.. புதிய மீன்களின் கண்கள் பளபளப்பாக இருக்கும்.
மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்க வேண்டும். வெள்ளை கலராக செவுள்கள் இருந்தாலும், வாங்க தேவையில்லை. செவுளை பிளந்து அந்த இடத்தை தொட்டு பார்த்தால் கைகளில் பிசின் போல உணர முடியும்.. அப்படி இருந்தால் அது ஃபிரெஷ் மீன்.
தலைப்பகுதி: மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விறைப்பாக இருக்க வேண்டும். மீனின் கழுத்தில் பிடிக்கும்போது எப்போதுமே விறைப்பாகவும், அதன் வால்பகுதி கடினமாக இருக்க வேண்டும்.. மீனின் சதைப்பகுதியை அழுத்திப்பார்த்தால் தடிமனாக, விறைப்பாக இருக்க வேண்டும். செதில்கள் சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும். செதில்கள் நிறைய இருக்க வேண்டும்.. இன்னும் இப்படி ஏராளமான விஷயத்தை சொல்கிறார்கள்.
ஆனால், உணவுத்துறை பாதுகாப்பு துறையினர் மீன் வாங்குவது குறித்து சில எச்சரிக்கைகளை அறிவுறுத்துகிறார்கள்.. அதாவது ENT டெஸ்ட் செய்ய சொல்கிறார்கள்.. E for கண்களால் அறிதல், N for முகர்ந்து அறிதல், T for தொட்டு அறிதல் என்பதுதான் இ.என்.டி. சோதனையின் அடிப்படையாகும்.
பளபள கண்கள்: எப்போதுமே மீன் கடைக்கு போனால், முதலில் மீன்களை கண்களாலேயே பார்வையிட வேண்டுமாம்.. பார்த்தவுடனேயே அந்த மீன்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. செதில்களில் சேதம் அடையாமல், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோல் இருக்க வேண்டும். செவுள்கள் ரெட் கலரில் இருக்க வேண்டும்.
அலர்ட்: இப்போது அடுத்தது முகர்தல் சோதனைக்கு வரவேண்டும்.. மீனை முகர்ந்து பார்க்க வேண்டும்.. புதிய மீன்களில் நாற்றம் வரவே வராது. புதிய மீனில், சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். ஆனால், கெட்டுப்போன மீனில் நாற்றம் இருக்கும்.
தரமான புதிய மீன் விரலில் தொட்டாலே வழுக்கும்.. ஈரமாகவும் இருக்கும். ரப்பர் போல இருக்கும். தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. இதுபோன்ற மீன்களை வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications