ஆட்டுக்கறி சாப்பிடறீங்களா.. அப்போ மட்டனில் இந்த 6 மேட்டரையும் மறக்காதீங்க.. இப்பவே நோட் பண்ணிக்குங்க
சென்னை: மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள்.. அந்தவகையில், எந்தெந்த பாகங்கள், எந்தவகையான நன்மைகளை தருகிறது என்று பார்ப்போம்.
ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.

நுரையீரல்: இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
நெஞ்செலும்பு: ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய கண்களுக்கு மிகுந்த பலத்தை தந்து பார்வையை கூர்மைப்படுத்தும்.. ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய கபம் நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது..
ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
தலைக்கறி: ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்..
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள்.. குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்கவேண்டுமென்று, இந்த ஆட்டுத்தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
ஆட்டு குடல்: ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், போட்டியை சமைத்து சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும்.. எனவே, கறியை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆட்டுக்கறியின் ஒவ்வொரு உடல் பாகத்தையும் சாப்பிடும்போது, ஆரோக்கியம் கூடும்..
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
சிவப்பு இறைச்சி: இது எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாவதை தூண்டுகிறதாம்.. அத்துடன், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள்.
ஆனாலும், குறைந்த அளவு மட்டன் சாப்பிடுவதால், ஓரளவு இதை தடுக்கலாம் என்கிறார்கள். செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையில் வெள்ளாட்டுக்கறியை தேர்வு செய்யலாம்.
காரணம், மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், அப்படி மட்டன் சமைக்கும்போது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்..
ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
வெங்காயம் + தக்காளி: அதேபோல, வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போலவும் சேர்த்து சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த நார்ச்சத்துக்கள் மட்டனுடன் இணைந்து வேகமாக கொழுப்பை எரித்துவிடும். சுருக்கமாக சொல்லப்போனால், மட்டனை எத்தனை முறை சாப்பிடுகிறோம், எப்படி சமைத்து சாப்பிடுகிறோம், எவ்வளவு நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதில்தான் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications