எவ்ளோ கிளீன் செய்தாலும் வீடுகளில் தூசி, துரும்பு இருக்கிறதா? ஸ்பைடர் செடிகளை வைங்க! ஆல் கிளியர்!
சென்னை: ஸ்பைடர் செடி கேள்விப்பட்டிருக்கீங்களா? இது ஒரு இன்டோர் பிளான்ட். எதற்காக வளர்க்கப்படுகிறது தெரியுமா?
சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது அபூர்வமாக உள்ளது. ஒரு கட்டத்தில் டெல்லியில் காற்று மாசால் பலர் அவதியடைந்தனர். செயற்கை சுவாச சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தினர்.

இந்த உடம்பில் காற்று என்ற ஒன்று இல்லை என்றால் உயிரற்ற பொருளாகிவிடுவோம். மூச்சு நின்னு போச்சுன்னா அவ்வளவுதான். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்றில்லை , எல்லாருக்கும் 6 அடி நிலம் கூட சொந்தம் கிடையாது.
உடலில் நோய் ஏற்படாமல் இருக்க சுத்தமான காற்று முக்கியம் என்கிறார்கள். அது போல் நுரையீரலை நன்கு இயங்க வைக்கவும் சில மூச்சு பயிற்சிகளை பலர் செய்கிறார்கள். வீடுகளில் மரம் வளர்த்தால் அவை நமக்கு சுத்தமான காற்றை கொடுக்கும் என இருந்தது.
ஆனால் இன்று மரம் வளர்க்க கால் காணி இடம் கூட விட்டு வைக்காமல் அத்தனையையும் கட்டடமாக்கி விடுகிறோம். இதனால் செடி வளர்ப்பது என்பது அரிதாகிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிகளின் பக்கவாட்டு கட்டை எனப்படும் சுவர்களில் தொட்டியை வைத்து செடிகளை வளர்த்து வருகிறோம்.
அது போல் தற்போது சுத்தமான காற்றை கொடுக்கும் இன்டோர் பிளாண்ட்களும் வந்துவிட்டன. அதில் முக்கியமானது ஸ்பைடர் பிளான்ட். இந்த செடிகள் பார்ப்பதற்கு ஊசி ஊசியாக இலைகள் இருக்கும். பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால் இது ஆரோக்கியத்தையும் தரும். இந்த செடிகள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவை.
இலைகள் மெல்லியதாகவும் அதில் பச்சை நிறங்களுக்கு இடையே வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும். கண்களை கவரக் கூடியது. இந்த செடிகளை வீடுகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். வீடுகளில் செடி வளர்த்தால் தூசிகள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் இருக்கும் தூசிகளை செடிகள் உறிஞ்சிகொள்ளும் என்கிறார்கள்.
தூசிகளை நீக்கி சுத்தமான காற்றை அளிப்பதில் இந்த ஸ்பைடர் செடிகள் சிறந்து விளங்குகிறது. இது காற்றில் உள்ள டொலுயூன், கார்பன் மோனாக்ஸைடு, சைலீன், ஃபார்மால்டிஹைடு போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை அகற்றுகிறது. இது பார்ப்பதற்குத்தான் சிறிய செடியாக இருக்கும். ஆனால் மரங்களுக்கு இணையாக இவை ஆக்ஸிஜனை தரும்.
இயற்கையின் ஆக்ஸிஜன் சிலிண்டர் என கூறலாம். வீடுகளுக்குள் செடியை வளர்த்தால் அதை நாம் பராமரிக்கும் போது மனதிற்கு அமைதியை தருகிறது. மனச்சோர்வை நீக்குகிறது. வீட்டில் செல்பிராணிகளை வளர்ப்போரும் இந்த செடிகளை எந்த தடையும் இன்றி வளர்க்கலாம். இந்த செடிகளை மருத்துவமனைகளில் நாம் பார்த்துள்ளோம்.
இவை நோயை விரைந்து குணமாக்கும் தன்மை கொண்டவை. இந்த செடிகளுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. சூரிய ஒளி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி , இவற்றை வளர்க்கலாம். இந்த செடிகள் வறட்சியை தாங்கும். என்பதால் வாரத்திற்கு இரு முறை சிறிதளவு தண்ணீர் விட்டாலே போதுமானது. இந்த சிலந்தி செடிகள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழும் என்கிறார்கள்.
மணி பிளாண்ட்டுடன் கூட இந்த செடியை வளர்க்கலாம். வீட்டில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இந்த செடிகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என்பதால் குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும் வளர்க்கலாம். பூனைகளுக்கு இந்த செடிகள் மிகவும் பிடிக்குமாம். இவற்றுடன் அவை விளையாடும் என்கிறார்கள்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications