சத்தான மூங்கில் அரிசி.. முழங்கால், மூட்டு வலிக்கு சூப்பர் மூங்கிலரிசி கஞ்சி.. ஆண்களின் வரப்பிரசாதம்
சென்னை: மூட்டு வலி, முழங்கால் வலிக்கு உதவக்கூடிய மூங்கில் அரிசியை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? ஆண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள மூங்கில் அரிசியின் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் மூங்கில் அரிசியானது, பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். கமகம வாசனையாகவும், இனிப்பு சுவையுடனும் இருக்கும். அப்படியே, கோதுமையின் ருசி போலவே இருக்கும். இதன் விதைகள் பச்சை நிறத்தில் இருந்தாலும், அது காயவைத்தே அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசிக்கு டிமாண்டு எப்போதுமே அதிகமாகும்..

மூங்கில் விதை: காரணம், மூங்கில் பூத்த விதை கிடைக்க வேண்டுமானால், 20 முதல் 120 வருடங்கள் பிடிக்குமாம். இந்த மரம் தன்னுடைய வாழ்வாளை முடிக்கும்போது, தன்னுடைய இனத்தை பரப்புவதற்காக பூத்து, விதைகளை உருவாக்கும். அதனால்தான், நீண்ட காலம் காத்திருந்து இந்த அரிசியை பெறுவார்கள்.. பழங்குடி மக்களின் மிக முக்கிய உணவாக இன்றுவரை மூங்கில் அரிசி திகழ்ந்து கொண்டிருக்கிறது.. அந்த காலத்தில், படைவீரர்களின் சத்துநிறைந்த உணவாகவும் இந்த அரிசி திகழ்ந்து கொண்டிருந்தது.
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளன. ஆனால், கொழுப்பு இதில் கிடையாது. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களின் பெஸ்ட் சாய்ஸாக இந்த அரிசி.. சர்க்கரை நோயாளிகள், இந்த அரிசியில் சமைத்து சாப்பிடும்போது, சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்க செய்கிறது.
பற்கள் உறுதி: வைட்டமின் B6 நிறைந்திருக்கும் மூங்கில் அரிசி பற்களை பாதுகாக்க உதவுகிறது. பற்சிதைவு, பற்குழிகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பற்களுக்கு உறுதியை தருகின்றன. உயர் ரத்த அழுத்த பிரச்சனை, ஆஸ்துமா உள்ளிட்ட தொந்தரவை நீக்கி நுரையீரலுக்கு பாதுகாப்பை தருகின்றன.. ஆண்களுக்கும், தாது விரித்தியடைய செய்கிறதாம்.
அத்துடன், கருவுறுதலை மேம்படுத்துவதற்கு இந்த அரிசி பேருதவி செய்கிறது. பெண்களின் கருப்பைக்கு பலத்தை தரக்கூடியவை. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு. மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், மூங்கில் அரிசியை கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும்.. இப்படி பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மூங்கில் அரிசியை மருத்துவரின் ஆலோசனையுடன் உணவாக எடுத்து கொள்வது நல்லது.
சத்தான கஞ்சி: முழங்கால் வலி, மூட்டுவலியை குணமாக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு.. பெரும்பாலும், மூங்கில் அரிசியில் சத்தான கஞ்சி செய்து சாப்பிடுவார்கள்.. மூங்கில் அரிசி, நொய் அரிசி இரண்டையும் 150 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தனித்தனியாக கொரகொரப்பாக பொடித்து கொள்ள வேண்டும். அதேபோல, சுக்கு தனியாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். இதில், நல்லெண்ணெய் ஊற்றி, உரித்து வைத்துள்ள நான்கைந்து பூண்டு பல் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். லேசாக கொதி வந்ததும் மூங்கில் அரிசியை கொட்டி வேகவிட வேண்டும். அடுத்து, நொய் அரிசியையும் சேர்த்து வேகவைக்க வேண்டும். எல்லாம் சேர்ந்து கஞ்சியாக வெந்ததும், உப்பு சேர்த்து இறக்கிவிடலாம்.
சுண்ணாம்புச்சத்து: இந்த கஞ்சியை குடித்து வந்தால், முழங்கால் வலி, மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் என அத்தனை தொந்தரவும் நீங்கும்.. உடலிலுள்ள சுண்ணாம்புச்சத்து குறைபாட்டையும் நீக்கி, எலும்புகளை உறுதியாகும்.. நரம்புத் தளர்ச்சியையும் சீர் செய்யும். எனவே பலவீன உடல்வாகு கொண்ட ஆண்களும் இந்த கஞ்சியை சாப்பிடும்போது, உடல் உறுதிப்பெறும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications