சோழிங்கநல்லூர் குளியலறையில் சுவரோரம் சின்ன கேப்.. உற்றுப் பார்த்த சென்னை மாணவிக்கு பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குளியலறையில் வீடியோ எடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற வக்கிர சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து வருகின்றன. இதையெல்லாம் தடுக்க "சிங்கப்படை" படையினர் அதிரடியாக களமிறங்கி ஸ்ட்ரிக்ட்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்க துவங்கி உள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருகிறார். நேற்று இந்த மாணவி தன்னுடைய வீட்டின் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.

Sholinganallur

சென்னை சோழிங்கநல்லூர்

அப்போது திடீர்னு பாத்ரூமின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவருக்கு இடையே இருந்த சின்ன இடைவெளியில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை கவனித்தார்.. கிட்ட உற்று பார்த்தபோது, அங்கே ஒரு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்டு, வீடியோ ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிவிட்டார்..

பயந்துபோன அந்த மாணவி, சத்தம் போட்டு கூச்சல் போட்டார்.. பாத்ரூமிலிருந்து பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டதுமே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.. அதற்குள் செல்போனை மறைத்து வைத்திருந்த நபர் அங்கிருந்து எகிறி தப்பியோட முயன்றார்.. அதற்குள் பொதுமக்கள் நாலாபக்கமும் சுற்றி வளைத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

குளியலறையில் மாணவி அலறல்

பொதுமக்களிடம் சிக்கிய அந்த நபரை செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்... பிறகு அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த நபரின் பெயர் தமிழ்மாறன் என்பதும், 23 வயதுடைய அவர், ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்பதும் தெரியவந்தது.,

ஆனால், படித்த இளைஞரே இப்படியொரு கேவலமான செயலில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வக்கிரம் பிடித்த நபர்கள்

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதுதான் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான் 4 நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இதே போன்ற ஒரு விபரீத சம்பவம் நடந்தது.. குன்றத்தூர் ஒன்றியம், மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான சர்வான் என்ற நபர், தன் வீட்டின் அருகே வசிக்கும் 35 வயது பெண் குளிப்பதை ரகசியமாக மறைந்திருந்து தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதைப் பார்த்து பதறிப்போன அந்தப் பெண், மாங்காடு ஸ்டேஷ்னில் புகார் தந்தார்.. அதன்பேரில் செயல்பட்ட போலீசார், சர்வானை கைது செய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்திருந்தது நினைவிருக்கலாம்..

சிங்கப்படை அதிரடி படை

இப்படி அடுத்தடுத்து பெண்களின் தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோஷியல் மீடியாவில் பலரும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய "சிங்கப்படை" போன்ற அதிரடிப் படையினர் களமிறங்கி, இது போன்ற வக்கிர புத்தி கொண்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.. இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இப்படியான அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்றும், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வார்னிங்கா இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+