முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு பிரத்யேக செயலி.. பயன்படுத்துவது எப்படி?
சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதி தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியாகும்.இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் மக்களுக்காக பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய உள்ளார் முதல்வர் விஜய். பெரம்பூர் மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து புகார் அளித்தார். அந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் நேரடியாக கவனித்து முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார்.அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த தொகுதியில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் மக்களின் தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாக பதிவு செய்து, அவற்றின் நிலையை நேரடியாக அறிந்துகொள்ள உதவும் பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாகிறது. மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சி நிர்வாகத்துடன் இணைக்கும் புதிய முயற்சி இது என்று தவெகவினர் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவிட்டு வருகிறார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தனி செயலி வெளியாகி உள்ளது. இதுபற்றி பெரம்பூர் மக்களுக்கான பிரத்யேக மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் "பெரம்பூர் தொகுதிக்காக தமிழக வெற்றிக்கழகம் வழங்கும் மக்கள் சேவை தளம். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை உண்டு. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை உண்டு. கல்வி மற்றும் மருத்தவ உதவிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள், தெருவிளக்கு எரியாதது, பழுதடைந்த சாலைகள், குப்பைகள் போன்ற பிரச்சனைகள் இனி பெரம்பூரில் கேட்கப்படும். ஒரு தேவை, ஒரு புகார், ஒரு குரல் சேவை என எதையும் பதிவு செய்யுங்கள்.
உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், அவற்றை இங்கு பதிவு செய்து, உடனே உதவியை பெறலாம். உங்கள் விவரங்களை நிரப்பி, வார்டை தேர்வு செய்து பிரச்சனையை குறிப்பிடுங்கள்.. உதாரணமாக வியாசர்பாடியில் ஒரு பள்ளம் என்று சமர்பியுங்கள். சில நொடிகளில் அலுவலகத்தை அடைந்தவிடும். தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால், மைக்கை தட்டி பேசுங்கள்..
வாட்ஸ் அப் வழியாக ஒரு சேவை ஐடி, உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.. ஒவ்வொரு கோரிக்கையும் கண்காணிக்கப்படும். முன்னுரிமை மற்றும் உறுதி அளிக்கப்பட்ட தீர்வு தேதியும் அதில் வழங்கப்படும். எப்போது வேண்டுமானாலும் புகாரின் நிலையை புகார் எண்ணை குறிப்பிட்டு அறியலாம். ஒவ்வொரு புகாரையும் வார்டு வாரியாக நீங்கள் அறியவும் முடியும். அதற்கான தீர்வுகளையும் அறிய முடியும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்பை தமிழக வெற்றிக்கழகத்தினர் அறிமுகம் செய்துள்ளதாகவே தெரிகிறது.. அதாவது எம்எல்ஏ சார்பில் பிரத்யேக ஆப் ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெகவினர் நம்பிக்கையாக கூறுகிறார்கள்.













Click it and Unblock the Notifications