Gatta Kusthi 2: கட்டா குஸ்தி 2 எப்படி இருக்கு? விஷ்ணு விஷால்- ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி மாஸா? வேஸ்டா? ரிவ்யூ இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022-ல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கணவன் மனைவி உறவை காமெடியாக கலந்து சொன்ன விதம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்

கட்டா குஸ்தி படத்தின் முதல் பாகத்தில் ஹீரோ ஹீரோயினி திருமணம் செய்து கொள்வதும், அதற்கு பிறகு இருவரும் பிரிவது, பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சண்டைகள் சமாதனங்கள் தான் கதையாக இருந்தது. இந்த முறை திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. குஸ்தி வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி தனது விளையாட்டில் போக்கஸ் செய்து கொண்டிருக்கும் போது வீட்டையும் குழந்தையும் பார்த்துக் கொள்ளும் ஹவுஸ் ஹஸ்பண்டாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். அந்த ஒரு மாற்றமே படத்திற்கு புதிய ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறது.

Gatta Kusthi 2 Review Vishnu Vishal Aishwarya Lekshmi

கட்டா குஸ்தி 2 கதை

போட்டிக்காக தயாரான நேரத்தில் ஐஸ்வர்யாவின் சாப்பாட்டில் மர்மமாக போதைப்பொருள் கலக்கப்படுகிறது. அதனால் போட்டியில் தோல்வி, ஒரு வருட தடை என வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. இதற்கு பின்னால் கணவர் விஷ்ணு விஷால் தான் காரணம் என்று நினைக்கும் அவர் விவாகரத்து கேட்கும் சூழ்நிலைக்கு போகிறார்.

பிறகு அந்த தவறான புரிதல் எப்படி உடைகிறது? குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறதா? என்பதுதான் படத்தின் மீதி கதை. விஷ்ணு விஷாலுக்கு இது இன்னொரு சிறந்த படம். கட்டா குஸ்தி முதல் பாகத்திலும் அவருடைய நடிப்பை அருமையாக காட்டியிருப்பார். அதேபோல இப்போதும் ஹீரோயிசம் காட்டாமல் குடும்பத்துக்காக வாழும் சாதாரண கணவனாக மிகவும் இயல்பாகவே நடித்து இருக்கிறார்.

கட்டா குஸ்தி 2 ரிவ்யூ

குறிப்பாக தன்னுடைய மகளுடன் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பு மக்கள் மனதை தொட்டு விடுகிறது. சிரிக்க வைப்பதிலும் எமோஷனல் கொடுப்பதிலும் சமநிலையை வைத்திருக்கிறார். அதுபோல ஐஸ்வர்யா லட்சுமியும் இந்த படத்தில் இன்னும் ஸ்ட்ராங்கான கேரக்டர் பெற்றிருக்கிறார் ஒரு விளையாட்டு வீராங்கனையின் அர்ப்பணிப்பு, தோல்வியால் ஏற்படும் மனவேதனை, குடும்பத்தை நினைத்து பயப்படுதல் என எல்லா உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இந்த படத்தின் பெரிய சர்ப்ரைஸ் குட்டி நட்சத்திரம் ஸாரா சியா தான். அப்பா பொண்ணு காட்சி படத்திற்கு உயிராக இருக்கிறது. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள், சில இடங்களில் எமோஷனலாக கண்கலங்கவும் வைக்கிறார்கள். படம் முடிந்த பிறகும் மனதில் நிற்பது அவர்களுடைய நடிப்புதான். கருணாஸ், முனிஸ் காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் வரும் இடங்களிலும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை.

Gatta Kusthi 2 Review Vishnu Vishal Aishwarya Lekshmi

கட்டா குஸ்தி 2 நடிகர்கள்

யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடைய கெஸ்ட் ரோல்களும் ரசிகர்களை கவர்கின்றன. மோக்ஷா நடித்த டீச்சர் கேரக்டரும் கதைக்கு நல்ல பலமாக அமைந்துள்ளது. நடிப்பு மட்டுமல்ல படத்தின் இசையிலும் படம் ஏமாற்றவில்லை. மகராசி பாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை சரியாக கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு, குஸ்தி போட்டி காட்சிகள், குடும்ப எமோஷனல் போன்ற காட்சிகளில் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் தரமாக இருக்கிறது. இயக்குநர் செல்லா அய்யாவு முதல் பாகத்தில் இருந்த காமெடியை மட்டும் நம்பாமல் இந்த முறை குடும்ப உறவுகள், கணவன் மனைவி உறவு பிரச்சனை, குழந்தையின் மனநிலை, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் போன்ற பல விஷயங்களையும் அழகாக ஒன்றிணைத்து ஒரு கூட்டாங்சோறு போல கொடுத்திருக்கிறார்.

Gatta Kusthi 2 Review Vishnu Vishal Aishwarya Lekshmi

படத்தின் பிளஸ்

பிரியாணி போல ஹெவியான மசாலா இல்லை என்றாலும் எளிமையான மனிதர்களுக்கு எளிதாக பிடிக்கிற மாதிரி ஒரு டிஸ் காட்டி இருக்கிறார்கள். சமீப காலமாக குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க நல்ல பொழுதுபோக்கு படங்கள் குறைந்து வரும் நிலையில் கட்டா குஸ்தி 2 அந்த குறையை ஓரளவு நிரப்பி இருக்கிறது. இந்த வார இறுதியில் குடும்பத்தோடு தியேட்டருக்கு போக நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+