கானாவாழை கீரை.. பெண்களின் வரப்பிரசாதம்..குழந்தை பேற்றினை தரும் மூலிகை.. கன்றுக்குட்டி புல் ஆச்சரியம்
சென்னை: பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு மிகவும் நன்மைகளை சேர்க்கும்.. ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியிருப்பதால்தான், தினம் ஒரு கீரையை சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். அந்தவகையில், மிக முக்கியமானது கானாவாழை கீரையாகும்.
கானாவாழை கீரை - இதை கன்றுக்குட்டி புல் என்று சொல்வார்கள்.. காரணம், இதன் இலைகளில் மட்டுமல்ல, தண்டுகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. இந்த தண்டுகளில் ஏராளமான புரோட்டீனும், மாவுச்சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் அடங்கியிருக்கின்றன.

கன்றுக்குட்டி புல்: அதனால்தான், கன்றுக்குட்டிகளுக்கு இந்த கீரை மிகவும் பிடிக்குமாம். கன்றுக்குட்டிகளின் தாய்ப்பாலை மறக்கடிக்க இந்த கீரையைதான் உணவாக தருவார்களாம்.
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்களை, எந்தவித கிருமிகளையும் அண்டவிடாமல் பாதுகாத்துள்ளது இந்த கீரை.. அதுமட்டுமல்ல காய்ச்சல் என்றாலே இந்த கீரையைதான் கைவசம் பயன்படுத்துவார்களாம்.. ஒரு கைப்பிடி இலைகளுடன், 10 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தாலே காய்ச்சல் பறந்துவிடுமாம்.
குளிர்ச்சி கீரை: இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. அதாவது ரத்த மூலத்தையே குணமாக்கக்கூடிய அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது என்கிறார்கள்.. இந்த கீரையுடன் துத்தி இலைகளையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலே ரத்த மூலம் குணமாகுமாம்.. சிறுநீர் எரிச்சலும் தணிந்துவிடும். உடலிலுள்ள சூட்டை அகற்றுவதுடன், தீக்காயம்வரை மொத்தத்தையும் போக்கக்கூடியது.
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய குழிப்புண்களை ஆற்றுவதற்கு, இந்த கானாவாழையை அரைத்து பற்று போட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.. அதேபோல, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு முதுகிலும், இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளிலும் படுக்கை புண்கள் ஏற்படும்.. இந்த புண்களை ஆற்றக்கூடிய சக்தி, குளிர்ச்சி நிறைந்த கானாவாழைக்கு உண்டு.
இந்த கீரையை பெண்கள் தவறவிடக்கூடாது.. காரணம், சரிவர மாதவிலக்கு வராமல் போனால், பெண்கள் இந்த கீரையை பயன்படுத்தலாம்.. அதேபோல, இந்த கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து, தயிரில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால், பெண்களின் வெள்ளைப்போக்கு பிரச்சனையும் விரைவில் தீரும்.. ரத்தத்தை தூய்மைப்படுத்துவதுடன், சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்புக்களையும், நச்சுக்களையும் இந்த கீரை வெளியேற்றுகிறது..
முகப்பருக்கள்: அதுமட்டுமல்ல, குளிர்ச்சி தரும் இந்த கீரையை கசக்கி பிழிந்து, சாறு எடுத்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து, முகப்பருக்களின் மீது தடவி வந்தால், அவை உதிர்ந்துவிடும்.. அதேபோல, பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும், வீக்கங்கள், கட்டிகள், காயங்கள் இருந்தால், இந்த கீரையை அரைத்து பற்று போடலாம்..
அதேபோல, பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.. அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு தாது பலத்தை இந்த கீரைகள் தருகின்றன.. தாம்பத்ய உறவின்போது உணர்ச்சியை தூண்டவும் இந்த கீரை உதவுகிறது..
வரப்பிரசாதம்: ஆனால், துவரம் பருப்புடன், இந்த கானா வாழையையும், முருங்கைப்பூவையும் சேர்த்து, கூட்டு போல வைத்து, நெய்யுடன் பிசைந்து சாப்பிட்டால், ஆண்களுக்கு மிகவும் நல்லது என்பார்கள்.
இந்த கீரையின் சாறு எடுத்து, அதில் ஜாதிக்காயை ஊறவைத்து, உலர்த்தி பவுடராக்கி, 2 கிராம் அளவு தினமும் சாப்பிட்டால் ஆண்மை குறைவும், நரம்பு தளர்ச்சியும் குணமாகும்.. ஆனால், இதுபோல் இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளதால், மருத்துவர்களின் உதவியுடன் மட்டுமே இந்த கானா வாழைக்கீரையை, முறையான மருந்தாக பயன்படுத்த வேண்டும்..
பற்கள் கிருமிகள்: வெறும் இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறிவிடும்.. பற்களிலும், தொண்டையிலும் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடும்.. அல்லது வெறும் இலைகளை பறித்து, கொதிக்க வைத்து குடித்தாலும் பலன்தரும்.
மொத்தத்தில், இந்த கீரையை பயன்படுத்தினால், நம்முடைய உடலில் நோய்கள் காணாமல் போய்விடுமாம். அதனால்தான், கானாவாழை என்று பெயர் வைத்தார்களாம் நம் முன்னோர்கள்.












Click it and Unblock the Notifications