Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கற்பூரவல்லியை விட்றாதீங்க.. ஒரே வாரத்தில் முகம் பொலிவு பெற.. 6 சூப்பர் டிப்ஸ்.. கஸ்தூரி மஞ்சள் மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகம் பொலிவு பெற, இயற்கையான முறையிலேயே நிறைய வழிகள் உள்ளன.. அதிலும் வீட்டிலேயே இதற்கான எளிய தீர்வையும் நாம் காணலாம். அதற்கான குட்டி குட்டி டிப்ஸ்தான் இவை:

பெரும்பாலும் முக பொலிவுக்கு காரணம், நாம் உண்ணும் உணவும், நீரும்தான் காரணமாக இருக்கின்றன.. தண்ணீர் குறைவாக குடிப்பதுதான், பெரும்பாலான கோளாறுகளுக்கு காரணமாகிவிடுகிறது. காய்கறிகள், பழங்கள், கீரைகள், இவைகளை உணவாகவும், மருந்தாகவும் எடுத்து கொண்டாலே, சருமம் ஆரோக்கியம் பெறும்.

Do you know Amazing Health benefits of Karpooravalli Leaves and Excellent Tips for Skin Glowing

தக்காளி: அந்தவகையில், தக்காளியை சொல்லலாம்.. தழும்புகளை நீக்கி, நிறத்தை மாற்றக்கூடிய சக்தி இந்த தக்காளிக்கு உண்டு.. காரணம் தக்காளியில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. இதனால், சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிக்க செய்கிறது.. தினமும் 1 ஸ்பூன் தக்காளி ஜூஸில், எலுமிச்சை ஜூஸ் சிறிது கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் போதும்.

எலுமிச்சம் சாறு: இந்த எலுமிச்சம் பழத்தை, எந்த பழங்களுடன் சேர்த்து கலந்து முகத்தில் பூசலாம்.. அல்லது தனியாகவே எலுமிச்சம் ஜூஸ் எடுத்து பூசிவரலாம். இதனால், தோலின் நிறம் ஒளிர்வதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும். இந்த எலுமிச்சம் சாறுடன் கடலை மாவு கலந்தும் பூசலாம்.. அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்தும் பூசிவந்தால், பலன் கிடைக்கும்.

Do you know Amazing Health benefits of Karpooravalli Leaves and Excellent Tips for Skin Glowing

குளிர்ந்த நீரில் சிறிதளவு பசும்பாலை கலந்து, அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பிரகாசம் அடையும்.. அதேபோல, பசும்பாலில் ஒரு ஸ்பூன் கசகசாவை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் விழுதாக அரைத்து முகத்தில் தேய்த்தாலும், முகம் பிரகாசிக்கும்.

கற்பூரவல்லி : கீரை வகைகளில், கற்பூரவல்லியை பயன்படுத்தியும் முகப்பொலிவை பெறலாம்.. கற்பூரவல்லி இலையை, ஓமவல்லி இலை என்று சொல்வார்கள்.. வெறும் சளி பிரச்னைகளுக்கு மட்டுமல்லாமல், முகம் பொலிவுக்கும் இந்த ஓமவல்லி இலை உதவுகிறது.

Do you know Amazing Health benefits of Karpooravalli Leaves and Excellent Tips for Skin Glowing

ஓமவள்ளி இலைகளுடன், சிறிது கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மிக்சியில் அரைத்து, அந்த சாறை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன், மீண்டும் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவிவர வேண்டும். அல்லது, இந்த ஓமவல்லி இலைகளுடன் தயிர் + எலுமிச்சம் சேர்த்தும் விழுதுபோல எடுத்து, முகத்துக்கு தடவலாம். இதனால், முகத்தில் உள்ள பருக்களும் நீங்கிவிடும்.. சருமமும் பொலிவு பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+