மூங்கில் அரிசி... அசால்ட்டா வெயிட் குறைக்கும் மூங்கிலரிசி.. வீட்டில் குட்நியூஸ் வரும்.. என்ன பாருங்க
சென்னை: அரிசி வகைகளிலேயே பெண்களுக்கு மிக அதிகமான பலன்களை தரக்கூடியது மூங்கில் அரிசி.. என்ன காரணம் தெரியுமா?
மூங்கில் மரத்தின் விதைகளையே, மூங்கிலரிசி என்பார்கள்.. பச்சை நிறத்தில் இருக்கும்.. கமகமவென வாசனையாக இருக்கும்.. தித்திப்பாக இருக்கும்.. அதாவது கோதுமை சுவையுடன் இருக்கும்!!

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்தது இந்த மூங்கில் அரிசிதான்.. ஊட்டச்சத்து மிக்க இந்த அரிசியில், சிறிதும் கொழுப்பு இருக்காது..
ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் இருப்பதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த அரிசி பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. கெட்ட கொழுப்பின் அளவையும் குறைப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் இந்த அரிசி ஏற்படுத்துகிறது.
சிறப்பம்சம்: மற்ற அரிசிகளை விட இந்த அரிசியில் புரதச்சத்து அதிகம்.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை இந்த அரிசியில் உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.. காரணம், இந்த அமிலங்கள் நம்மை தாக்கும் பல மோசமான நோய்களின் அபாயத்திலிருந்து நம்மை காக்கிறதாம்.
காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்களின் பிரதான உணவாக அன்றும் திகழ்கிறது மூங்கில் அரிசி.. அதேபோல, குரங்கு, யானைகளுக்கும் மூங்கில் அரிசி மீது தனிப்பிரியம் உண்டு.. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் சிறந்த உணவாக மூங்கில் அரிசி உள்ளது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். எனினும், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது நல்லது.
பற்கள் ஆரோக்கியம்: மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 நிறைந்துள்ளதால், பற்களின் ஆரோக்கியம் பேணப்படுகிறது.. பற்களில் சிதைவு, பற்களில் துவாரங்களை சரிசெய்து, பற்களுக்கும், ஈறுகளுக்கும் உறுதியை தர இந்த அரிசி துணை புரிகிறது.
பெண் எலிகளுக்கு இந்த மூங்கில் அரிசியை தந்து ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அப்போது, பெண் எலிகள் ஏகப்பட்ட குட்டிகளை ஈன்றெடுத்துவிட்டனவாம். அந்தவகையில், கருவுறுதலை மேம்படுத்துவதற்கு இந்த அரிசி உதவுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. அத்துடன், பெண்களின் கருப்பை பலம் பெறவும், இந்த மூங்கில் அரிசி பயன்படுகிறது.
ஆண்மை குறைபாடுகள்: கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் குறைபாடுகள் இருந்தாலும் அதையும் இந்த அரிசி நீக்கி விடும்.. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளையும் இந்த அரிசி சரிசெய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. ஆண்மை குறைபாடுகளை போக்குவதிலும், மூங்கில் அரிசிக்கு பெரும் பங்கு உள்ளது.. தாது விரித்தியடைய செய்கிறதாம் இந்த அரிசிகள்..
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், இந்த மூங்கில் அரிசியை பயன்படுத்தலாம். இதனால் நுரையீரல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதைவிட முக்கியமாக தமனிகளின் அடர்த்தியை குறைப்பதற்கும் உதவுகிறது.
மனநிலை: மூங்கில் அரிசி நரம்பு மண்டல கோளாறுகளுக்கும் உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்த பழுப்பு அரிசி மனநிலையை ஒழுங்குபடுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், மனநிலையை சீராக வைத்து மன செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.












Click it and Unblock the Notifications