நெல்லிக்கனி பெஸ்ட்.. நல்ல நல்ல பலனுள்ள நெல்லிக்காய் இலைகள்.. இதுதான் "ஆம்லா கஷாயம்".. சூப்பர் பவர்
சென்னை: நெல்லிக்காய்கள் மட்டுமல்ல, நெல்லியின் இலைகளும் மருந்தாகி நம்மை காக்கின்றன.. எப்படி தெரியுமா?
வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. ஆனால், வைட்டமின் C சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.. நெல்லிக்காயில் 600 மில்லி அளவுக்கு வைட்டமின் C உள்ளதாம். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய் மட்டுமே.

ரத்த சோகை: நெல்லிக்காயை ராஜகனி என்பார்கள்.. காரணம், நம்முடைய உடலிலுள்ள பெரும்பாலான நோய்களை இந்த நெல்லிக்காய் தீர்த்து வைக்கிறது.. பல நோய்களை நெருங்க விடாமல் விரட்டியடிக்கிறது.
ரத்த சோகை இருந்தால், நெல்லிக்காய் சாப்பிட்டால்போதும் இரும்புச்சத்து கூடிவிடும்.. தலைமுடியும் அடர்த்தியாக வளரும். கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் நரைமுடியை தடுக்கும்.
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டுவந்தால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது இந்த நெல்லிக்காய், எனவே, டாக்டரின் ஆலோசனையை பெற்று நெல்லிக்காய்களை சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த இந்த நெல்லிக்காய், மலச்சிக்கலை போக்குகிறது. அசிடிட்டி, அல்சர், போன்றவற்றை விரட்டி, உடலிலுள்ள செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.. இதயத்திற்கு நன்மை தருகிறது. கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது. ரத்த நாளங்கள், தமனிகளை சீராக வைத்திருக்க உதவுகிறது. வயதான தோற்றத்தை தள்ளிப்போடுகிறது..
இலைகள்: நெல்லிக்காயை போலவே நெல்லிக்காய்களின் இலைகளும் மருத்துவ பலன்கள் நிறைந்தவை.. கிட்டத்தட்ட புளிய இலை போலவே இந்த நெல்லிக்காய் இலைகள் காணப்படும்.. எப்போதுமே, எல்லா காலங்களிலும் பச்சை பசேலென மரத்தை வைத்திருக்கக்கூடியது இந்த இலைகள்.
நெல்லி இலைகளை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சூடு பொறுக்கும் அளவுக்கு வாயில் ஊற்றி கொப்பளித்தால், வாய் சுகாதாரம் காக்கப்படும்.. வாய்ப்புண்கள் ஆறிவிடும்..
கஷாயம்: அதேபோல, நெல்லி இலைகளை தண்ணீரில் ஊறவைத்து கஷாயம் செய்து, கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நிறைய காபி டீ குடிப்பவர்களுக்கு பித்தம் உடலில் சேர்ந்துவிடும். இந்த பித்தத்தையும் நெல்லை இலை கஷாயம் நீக்கிவிடும்.
அதேபோல, ஆஸ்துமாவின் தீவிரத்தையும் குறைக்கக்கூடியது இந்த இலைகள்.. இதன்மூலம் சுவாச கோளாறுகளும் சளியும் நீங்கிவிடும்.. தலைசுற்றல், வாந்தி உணர்வு இருக்கும்போது, இந்த நெல்லை இலைச்சாறு கை கொடுக்கிறது.
நெல்லி இலைகள்: வயிற்று வலி அதிகமாகிவிட்டாலோ அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டாலோ, நெல்லி இலையை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரில் சோம்பு கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடுமாம்.
நெல்லி மரத்தின் வேர்கள் கூட இதற்கு மருந்தாகும்.. வாந்தி, சுவையின்மை, மலச்சிக்கல், காய்ச்சல் ஏற்பட்டால், நெல்லி வேர்கள் கை கொடுத்து உதவுகின்றன.. சீதபேதி போன்ற பிரச்சனை இருந்தால், நெல்லி இலைக் கொழுந்தினை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications