Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லீரல் காக்கும் கற்பகவிருட்சம் அமிர்தவல்லி இலை.. இதய நோயாளிகளின் அருமருந்தாகும் சீந்தில் இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலுறுப்புகளை பலப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய மூலிகைகளில் ஒன்று அமிர்தவல்லி இலை.. இந்த இலை தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நம்முடைய எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய மூலிகைகளில் ஒன்றுதான், அமிர்தவல்லி இலைகள்.. இதனை சீந்தில் இலை என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு இதய வடிவில் காணப்படும் இந்த கொடியிலை, நம்முடைய இதயத்துக்கு மிகவும் நல்லது.

Amirthavalli leaf Liver

இதய பாதுகாப்பு: அதாவது, இதய நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சையில் இந்த அமிர்தவல்லி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு இதயத்தை காக்கக்கூடிய முக்கியமான பணியை இந்த இலைகள் செய்கின்றன.

அதேபோல, டெங்கு, பன்றி காய்ச்சல், மலேரியா போன்ற கடுமையான ஜூரத்தையும் குறைக்கிறது. அதனால்தான், இந்த இலைகளின் காம்புகளையும் சேர்த்து காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

தொற்றுகள்: அமிர்தவல்லி இலைகள் மலச்சிக்கலை தீர்க்கின்றன.. ஞாபகசக்தியையும் பெருக செய்கின்றன.. இதற்கெல்லாம் இந்த இலையுடன், காம்புகள் சேர்த்து ஜூஸ் போல தயாரித்து குடிக்கலாம்.. அல்லது டீ தயாரித்து குடிக்கலாம்.. உடல் பலவீனமானவர்கள் இதை குடித்து வரும்போது, எதிர்ப்பு சக்திகள் கூடும்.. அதேபோல, சிறுநீரக தொற்றுகளும் நீங்கிவிடும்.

இதில் டீ தயாரிக்க வேண்டுமானால், அமிர்தவல்லி காம்பு, இலைகளை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, 2 துண்டு இஞ்சி, 3 துளசி இலைகள், 3 நசுக்கிய மிளகு, அமிர்தவல்லி காம்புகள், குச்சிகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு குடிக்கலாம்.

கழிவுகள்: இந்த இலைகளில் மட்டுமல்லாமல் இதன் காம்பிலும் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால், உடலிலுள்ள கழிவுகளையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற இலைகள் பேருதவி புரிகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.. எனவே, குடல் மட்டுமல்லாமல், ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது.

அமிர்தவல்லி இலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்து பின் காலை எழுந்ததும் குடித்து வந்தாலே நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்குமாம்.
கல்லீரல் நோய்களை நெருங்க விடாமல் தடுப்பதில் இந்த அமிர்தவல்லிக்கு பெரும்பங்கு உண்டு.. பொதுவாக, நம்முடைய உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் கல்லீரலின் பிரதான பணிதான்.. புரதத்தை உருவாக்குவதும் கல்லீரல்தான்.

கல்லீரல் தொற்று: ஆனால், கல்லீரலுக்குள் எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே அந்த நோய் வெளியே தெரியவரும். எனவேதான், கல்லீரலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதே இதற்கு சிறந்த வழி.. இதற்கு அமிர்தவல்லி போன்ற இலைகளும் உதவுகின்றன.
ஆனால், இந்த இலைகளையும் அதிகமாக சாப்பிடுவது கல்லீரலுக்கு நல்லதல்ல என்பார்கள். முக்கியமாக, இந்த இலைச்சாற்றினை நேரடியாக குடிக்காமல், தண்ணீரில் கலந்தே குடிக்க வேண்டும். அதுவும் 6 வாரங்களுக்கு மேல் குடிக்கக்கூடாது என்கிறார்கள்.. இதைவிட முக்கியமாக, எந்த அளவு சாறு எடுத்து கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. அதனால், டாக்டர்களின் முறையான முறையான வழிகாட்டுதல் இல்லாமல், இந்த இலைகளை மருந்தாக உட்கொள்ளக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+