வெறும் "இது" மட்டும் போதுமாமே.. விறுவிறுன்னு உடல் எடை குறையுதாம்.. ஆனாலும் "அந்த" கண்டிஷன் இருக்கே
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ வழிமுறைகளை பலர் கையாண்டு வருகிறார்கள். இதில் முக்கியமானது பிளாக் காபி ஆகும்.. கடுங்காபி என்பார்கள். இந்த ஒரு காபி, பல நன்மைகளை தரக்கூடியது என்பது பலரும் அறியாத தகவல்.
பால், சர்க்கரை, காபிதூள் என அனைத்தும் கலந்து காபி குடித்து பழகியோருக்கு இந்த பிளாக் காபி சற்று கசப்பானதுதான்.. ஆனால், பிளாக் காபி குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது, உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும் நல்லது. சர்க்கரை இல்லாத அதாவது, கொழுப்பு, கலோரிகள் இல்லாத வெறுங்காபியை குடித்தால், உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவது கிடையாது.

அந்த வகையில் இவ்வளவு சிறப்புகள் பொருந்திய பிளாக் காபியை தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்..
கல்லீரல்: உள்ளுறுப்புகளுக்கு இந்த காபி மிகவும் நல்லது.. கல்லீரலை பாதுகாப்பதுடன், கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்புகளையும் கரைக்க இந்த பிளாக் காபி உதவுகிறது.. மார்பக புற்றுநோயின் அபாயத்தை இந்த காபி குறைக்கிறது.. மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.. நினைவுத்திறன் அதிகரிக்கும்.. மன அழுத்தம் நீங்கும்.. தொடர்ந்து பிளாக் காபி குடித்து வந்தால், இதய நோய்களை தடுத்து நிறுத்தலாம்.. பக்கவாத அபாயத்தை விரட்டியடிக்கலாம்..
2 கப் பிளாக் காபி: தினமும் 2 கப் பிளாக் காபி குடித்தாலே போதும் என்கிறார்கள்.. பிளாக் காபியை குடித்தால், உடல் எடை குறைகிறது.. கலோரிகளும் குறைவு என்பதுடன், குளுக்கோஸ் உற்பத்தியும் மெதுவாக்குவதற்கு இது துணை புரிகிறது.
இந்த பானத்தில், காஃபின் உள்ளதால், மெட்டா பாலிசத்தை அதிகரிக்க இது தூண்டுகிறது.. ஆற்றலை அதிகரிக்க செய்து, பசி உணர்வு தெரியாமலும் வைக்கிறது.. சாப்பிட்டு முடித்ததுமே, நிறைய பேர் பிளாக் காபி குடிப்பது இதற்காகத்தான்.. இதனால் கெட்ட நீர் வெளியேறி உடல் எடையும் குறையும். நீர்ச்சத்தை குறைக்க உதவுவதுடன், சிறுநீரை வெளியேற்றவும், இந்த பிளாக் காபி உதவுகிறது.
நோய் அபாயம்: பிளாக் காபி குடித்தால், டைப்-2 நீரிழிவு நோய் அபாயமும் குறைகிறதாம்.. இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறதாம். பிளாக் காபி நன்மைகளை தருகிறது என்பதற்காக அதிகம் குடித்துவிட கூடாது.. 2 அல்லது 3 கப்களே போதும் என்கிறார்கள்..
காரணம், அதிக காபி குடித்தால், உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்களை உணவில் இருந்து உறிஞ்ச முடியாது.. அதனால்தர்ன, ஒருவர் தினமும் 400 மில்லிகிராம் காஃபின் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டு என்கிறார்கள்.
நிறைய காபி குடித்தால், மன அழுத்தம் வந்துவிடுமாம்.. அதுவும், நைட் நேரத்தில் பிளாக் டீ குடித்தால், தூக்கத்தை கெடுத்துவிடும். நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை அல்லது வேறு வயிறு தொடர்பான உபாதைகளை தந்துவிடும்..
தவிர்க்கலாம்: அதேபோல, கர்ப்ப காலத்தில் நிறைய காஃபின்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்றவற்றுக்கு வழிவகுத்துவிடும். அதேபோல, வெறும் வயிற்றிலும் இந்த பிளாக் டீ குடிக்கக்கூடாதாம். அப்படி குடித்தால், ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியை அதிகரிக்க செய்து, வயிற்றில் புண்கள் ஏற்பட காரணமாகிவிடுமாம். அதனால், ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அதற்கு பிறகு பிளாக் காபி சாப்பிட சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications