Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊளைச்சதை தொங்குதா? அப்ப முட்டைக்கோஸை எடுங்க.. அந்த பழத்தை விடாதீங்க.. வெயிட் லாஸூக்கு சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊளைச்சதை குறையவும், உடல் எடை குறையவும் உணவு வகைகளில் கூடுதல் கவனத்தை செலுத்தினாலே போதும். அந்தவகையில் குட்டி டிப்ஸ் பார்ப்போம்.

உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது முக்கியமாகிறது.. குறிப்பாக, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், காலை உணவை தவிர்க்கக்கூடாது..

Health Health Tips Cabbage cabbage Cholesterol Body Weight

வைட்டமின் C: காலை உணவுதான் நம்முடைய அன்றைய நாளின் முதல் உணவு.. நாளெல்லாம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதும் இந்த காலை உணவுதான்.

எனவே, வைட்டமின் C நிறைந்த உணவை காலை நேரங்களில் சாப்பிடும்போது, உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதேபோல, "சூப்பர் புட்" என்று சொல்லப்படும் உலர் பழங்கள் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார்கள். உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேர்வதை தடுக்க உலர் பழங்கள் பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்கள்.

அதேபோல, உடல் எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவதே முதன்மையான விஷயமாக உள்ளது.. இதற்கு உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அந்தவகையில், முட்டைக்கோஸ் மிக முக்கியமான காய்கறியாகும்.

முட்டைக்கோஸ்: காரணம், இந்த முட்டைக்கோசில் வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளதால், நம்முடைய உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த முட்டை கோஸ் உதவுகிறது.
குடை மிளகாயை பொறுத்தவரை வைட்டமின் C அதிகம் உள்ள காயாகும்.. உடலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை இந்த குடைமிளகாய்களுக்கு உள்ளது.. காரணம், 100 கிராம் குடைமிளகாயில் 50 கலோரிகள் இருக்கிறதாம்.

சுரைக்காய்: சுரைக்காயை பொறுத்தவரை, குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. சுரைக்காயுடன் சிறிது புதினா இலை, சிறிய துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், கல் உப்பு என அனைத்தையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி குடித்தாலே ஊளைச்சதை குறைய துவங்கும்

கேரட்டையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். தித்திப்பு சுவை என்றாலும், உடல் எடையை கேரட்கள் குறைக்கின்றன.. காரணம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்துகள் இவை இரண்டுமே கேரட்டில் அதிகம் இருக்கின்றன. அவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகின்றன. காளான்களும் வயிற்றிலுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் அதிக கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்...

முருங்கைக்கீரை: கீரைகளில் முருங்கைக்கீரை முதன்மையானது.. இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் எல்லாவகையான கீரைகளிலுமே உள்ளதால், தினம் ஒரு கீரை அவசியமாகும்.. நார்ச்சத்துக்கள் கீரைகளில் உள்ளதால், நச்சுக்களை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

பழங்களில் ஆப்பிள் பழத்தை தவறவிடக்கூடாது.. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் தன்மை ஆப்பிளில் உள்ளதால், உடல் எடையை ஆப்பிளை கொண்டே சீராக பராமரிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+