இத்தூனூண்டு பூண்டு.. வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? நோட் பண்ணுங்க
சென்னை: ஒரே ஒரு பல் பூண்டு, நமக்கு என்னவெல்லாம் நன்மைகளை தருகிறது தெரியுமா? நம்முடைய உடலில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற பூண்டுக்கு நிகர் வேறில்லை என்றே சொல்லலாம்.
அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் இந்த பூண்டில் உள்ளதால்தான், இத்தனை மருத்துவ சக்தியை தன்னுள் வைத்திருக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு பூண்டிற்கு உண்டு..

பூண்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி பெருகும்.. செரிமான கோளாறுகளும் விலகும்.. உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுகிறது.. அந்தவகையில், எடை இழப்புக்கும் பூண்டு அடித்தளமாகிறது.
பூண்டு பற்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரே ஒரு பூண்டு பல்லை மென்று சாப்பிட்டாலே, ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் உணவில் பூண்டு பயன்படுத்தலாம்.. தினமும் 5 பூண்டு பற்களையாவது, பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன், தொப்பை கரைய துவங்குமாம். வெதுவெதுப்பான நீரில் 2 பல் பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், ரத்த சுத்திகரிப்புக்கு சிறந்தது என்கிறார்கள்.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உடலில் ரத்த குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும்.. அதேபோல, அனிமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பூண்டு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.. இதற்கு பூண்டுக்கஞ்சி வைத்து சாப்பிடலாம். பூண்டு + வெந்தயம், உளுந்து மூன்றையும் அரைத்து தூள் செய்து, பசும்பால் விட்டு வேகவைத்து, பனங்கற்கண்டை சேர்த்து கஞ்சி போல சாப்பிட்டால், ரத்த சோகை பிரச்சனை நீங்கிவிடும்.
மாரடைப்பு: ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். பாலில் பூண்டை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மாரடைப்பு அண்டாது. தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டு முடிஉதிர்ந்துவிட்டால், பூண்டு தோல் இதற்கு தீர்வு தருகிறது.. பூண்டுத்தோல் வெறும் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்றாக வறுத்து அரைத்து, அதை எண்ணெய்யில் கலந்து பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவந்தாலே இதற்கு பலன் கிடைக்கும்.
நெஞ்சுசளி அதிகமாகிவிட்டால், 5 பூண்டு பல்எடுத்து, தோல்சீவி, 100 மில்லி பசும்பாலில் சேர்த்து வேகவைக்கலாம்.. பூண்டு நன்றாக வெந்ததும் அதை கடைந்து, பனங்கற்கண்டுடன் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி கட்டுப்படும்.
இதய அபாயம்: ஒரு டீஸ்பூன் நசுக்கிய சாப்பிட்டு வந்தாலே இதய நோய் அபாயம் குறைகிறதாம்.. காது வலி வந்தால், சுடுநீரில் கல்உப்பு + பூண்டு சாறு கலந்து காதில் 3 துளிகள் ஊற்றினாலே காது வலி பறந்துவிடுமாம். பல்வலி இருந்தாலும், ஒரு பல் பூண்டை நறுக்கி வலி கொடுக்கும் பல்லின் கீழ் வைத்தால் நிவாரணம் கிடைக்கும். உடலில் ஏற்படும் புற்று நோய் செல்கள் அழிந்து விடும்.. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
ஆண்கள் பூண்டு சாப்பிட்டுவருவது, பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தாய்ப்பாலை விருத்தி செய்யக்கூடியது.. அதனால்தான், பாலூட்டும் தாய்மார்களுக்கு, சுறா புட்டு செய்யும்போது, நிறைய பூண்டு சேர்த்து சமைத்து தருவார்கள். அதிக மன அழுத்தத்தில் வேலை பார்ப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பலக் கிடைக்குமாம்,.
அலர்ஜி: ஒரே ஒரு பல் பூண்டு இத்தனை நன்மைகளை தந்தாலும்கூட, சிலருக்கு பச்சை பூண்டு சாப்பிடுவது அலர்ஜியை தந்துவிடும். சிலருக்கு கொப்புளங்கள் வரலாம், அல்லது தலை வலி ஏற்படலாம். இப்படி ஏதாவது அறிகுறி தென்பட்டால், பச்சை பூண்டு சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம்.












Click it and Unblock the Notifications