வெற்றி + இலை = வெற்றிலை.. வயிற்றுப்புண்களை ஆற்றும் அற்புதம்.. தம்பதிகளின் வரப்பிரசாதம் வெற்றிலை
சென்னை: வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், ஆண்மை குறைபாட்டை வெற்றிலை எப்படி தீர்க்கின்றன தெரியுமா?
வெற்றிலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், என ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன.. இதில் பிரதானமாக இருப்பது, கால்சியம், இரும்புச்சத்துக்கள்தான்,
வாய்நாற்றம்: உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்...

வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்... வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.
ஆண்மை குறைபாடு: இப்படி பல நன்மைகளை இந்த வெற்றிலை தந்தாலும், ஆண்மை குறைபாட்டினை போக்குவதற்கு பிரதானமாக பயன்படுகிறது என்கிறார்கள்.. சமீபகாலமாகவே, தவறான பழக்க வழக்கங்கள், ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகள் காரணமாக ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்துவருகிறார்கள். இதற்கெல்லாம் வெற்றிலை தீர்வு தருகிறது. இந்த வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தாலே, வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்கிறார்கள்.
விறைப்பு பிரச்சனைக்கு இந்த வெற்றிலை தீர்வு தருகிறது..வெற்றிலையை இடித்து, அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் சாறு எடுத்து. தேனுடன் சாப்பிட்டு வந்தாலே விறைப்பு பிரச்சனை சரியாகும். வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி சிறிது சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கும்.
தாம்பத்யம்: அதேபோல, இந்த வெற்றிலையுடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கோரோசனையையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் ஆர்வம் அதிகரிக்குமாம்.. ஆண் பெண் இருவருமே இதனை சாப்பிடலாம்.
அதேபோல, 2 வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, சிறிது ஜாதிக்காய், சிறிது ஜாதிப்பத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், , லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை, போன்ற அனைத்தையும் சேர்த்து, இரவு சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிட்டு வந்தால், உடலில் ஊறுவதுடன், தாம்பத்யத்திலும் நல்ல பலனை பெற்றுத்தரும் என்கிறார்கள்.
இப்படி 2 வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வரலாம்.. ஆனாலும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இதை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications