வெற்றி தரும் வெற்றிலை.. இது ரெண்டையும் வெறும் வயிற்றில் மெல்லுங்க.. சர்னு வெயிட் குறையும்.. அசத்தல்
சென்னை: உடல் எடையை குறைப்பதில் வெற்றிலை எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறது தெரியுமா? எப்படி பயன்படுத்த வேண்டும்?
வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தாலே, உடலிலுள்ள கொழுப்பு கரைய துவங்குமாம்.. அதாவது, பச்சை நிறத்திலுள்ள, ஒரு கொழுந்து வெற்றிலையில், 5 கருப்பு மிளகு சேர்த்து அதை உருட்டி, வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கொழுந்து வெற்றிலை, மிளகு சேர்த்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் மாற்றம் தெரியுமாம்.
இது எப்படி நடக்கிறது தெரியுமா? வெற்றிலையில், வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன.. எனினும் கால்சியமும், இரும்புச்சத்தும்தான் இதில் அதிகமாகவே நிரம்பியுள்ளது.
வெற்றிலைகள்: மேலும் இயல்பாகவே வெற்றிலைகளில், இரைப்பை குடல் வலி நீக்கி குணங்கள் நிறைந்துள்ளன.. இவைகள் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.. வெற்றிலையை மென்று விழுங்குவதால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும், காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
இயல்பாகவே, கொழுப்பை கரைக்கும் தன்மையும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மிளகுக்கு உண்டு.. எனவே, ஆயுர்வேதத்தின்படி, வெற்றிலையும், மிளகும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பேருதவி புரிகின்றன.
அஜீரணம்: மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பு உள்ளன. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது மிளகுதான். உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவது இந்த மிளகுதான்.
உயர் ரத்த கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள், கணைய பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து நிறுத்துகிறது. மிளகை பச்சையாக சாப்பிட்டால், புரதங்கள் செரிக்க உதவும்.. இரைப்பை குடல் நோய்களிலிருந்தும் விடுபடலாம். மலச்சிக்கலும் நிரந்தரமாக தீரும். அதுமட்டுமல்ல, மிளகில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் பெப்பரின் போன்றவை கலந்திருப்பதால், கொழுப்பை வெகுவாக கரைக்க தூண்டுகின்றன..
குடல் சுத்தம்: அதனால், வெற்றிலையை மிளகுடன் மெல்ல ஆரம்பித்ததுமே, வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். பிறகு, நீங்கள் ஏற்கனவே உண்ட உணவின் செரிமானம் சிறப்பாக நடைபெற துவங்கும்.. இதனால், செரிமானம் மட்டுமல்லாமல், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகின்றன.. இதனால் குடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுவதுடன், உடல் முழுவதுமே சத்தமாகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications