வெத்தல வெத்தல.. வெற்றியை தரும் வெற்றிலை.. நுரையீரலின் நண்பன்.. உடல் எடையை குறைக்குதாமே வெற்றிலை.. அட
சென்னை: வெறும் ஜீரணத்துக்காக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட்ட, வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. இந்த வெற்றிலை உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்பது தெரியுமா? நுரையீரலின் பாதுகாவலனாக இந்த வெற்றிலை எப்படி பயன்படுகிறது தெரியுமா?
வரப்பிரசாதம்: வெற்றிலையில், வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன.. எனினும் கால்சியமும், இரும்புச்சத்தும்தான் இதில் அதிகமாகவே நிரம்பியுள்ளது.

மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளூறுப்புகளை பலப்படுத்தக்கூடியது.. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுத்து, ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்கிறது. வெற்றிலையுடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டாலே, பசி நன்றாக எடுக்கும். ஆனால், வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணார்மபு குறைவாகவும் சேர்த்து மென்றால், வயிற்றுப்புண், வாய்ப்புண்கள் ஆறும்..
உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், காயங்கள், தடிப்புகள் ஏற்பட்டால், வெற்றிலையை வைத்து கட்டுவார்கள். அல்லது நெருப்பில் வாட்டி, அதன் சாறு எடுத்து தடவினால், வலிநிவாரணம் உடனடியாக கிடைக்கும்.
சளி தொல்லை: சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த வெற்றிலை சிறந்த தீர்வாகும்.. மார்பு, நுரையீரல் அடைப்பு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், வெற்றிலையில், சிறிது கடுகு எண்ணெயை தடவி சூடாக்கி மார்பின்மீது வைத்தால், நிவாரணம் கிடைக்கும்..
அல்லது 2 கப் நீரில் சில வெற்றிலைகள், ஏலக்காய், கிராம்பு லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. தண்ணீர் பாதியாக சுண்டியதும், இதை தினமும் 2 அல்லது 3 முறை சாப்பிட்டால் அத்தனை சுவாச பிரச்சனைகளும் காணாமல் போயிவிடும்.. சளி தொற்று ஏற்படாது.. ஒரு வெற்றிலையில், 6 துளசி இலையை சேர்த்து, கசக்கி அந்த சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் குணமாகி, செரிமான ஆரோக்கியம் மேம்படும். அல்லது கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடாக்கி, ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், இருமல் குறையும்..
குடல் இயக்கம்: இரவில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போட்டுவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.. குடல் இயக்கத்தை எளிதாக்கும்..
தலையில் தண்ணீர் கோர்த்துவிட்டாலோ, அல்லது மூக்கில் விடாமல் சளி ஒழுகினாலோ, வெற்றிலை சாற்றை மூக்கில் விட்டால் குணமாகும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு குணமாகும்.
அதேபோல, சுக்கு, மிளகு, திப்பிலி, வெற்றிலைச்சாறு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவும் குணமாகும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால், வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து குடிந்துவந்தால் பலன் கிடைக்கும். அதனால்தான், வெற்றிலையை நுரையீரலின் பாதுகாவலன் என்கிறார்கள்.
வெயிட் லாஸ்: உடல் எடையை குறைப்பதிலும் வெற்றிலையின் பங்கு அதிகம்.. இளம் வெற்றிலையுடன் நான்கைந்து மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றாலே போதும்.. உடல் எடை குறைய துவங்கும்.. அதுவும் வெறும் வயிற்றில், தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்கும். வயிறு சுத்தமாகும்..
இரைப்பை குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் உடனடியாக நீங்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்... இரவு தூங்க போகும்போது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர்திராட்சை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றுவருவது, உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.
புகையிலை: காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களிலிருந்து, வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தவகையில், உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க செய்வதில், வெற்றிலையின் பங்கு மகத்தானது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications