கத்தை கத்தையா உதிருதா தலைமுடி.. கறிவேப்பிலையுடன் "இதை" மட்டும் சேருங்க.. கருகருன்னு வளரும் தலைமுடி
சென்னை: தலைமுடி உதிர்தலுக்கு நிரந்தர தீர்வு பலருக்கும் கிடைப்பதில்லை.. முழுக்க முழுக்க ரசாயனங்களை நம்பாமல், எளிய முறையில் வீட்டிலேயே இதற்கு தீர்வு காணலாம்.
தலைமுடி உதிர பல காரணங்கள் இருக்கலாம்.. உப்பு தண்ணீரில் குளிப்பது, பிளீச்சிங் கலந்த தண்ணீர் உபயோகித்தல், அதிக நேரம் தலை ஈரமாக இறுக்கமாக சுற்றி வைத்தல், தலையில் சிறு கட்டிகள் வருதல், எண்ணெய் பசை போன்றவை காரணமாக இருக்கலாம்.
வெள்ளைப்போக்கு: ரத்த சோகை, ரத்த சம்பந்த வியாதி உள்ளவர்களுக்கு முடி அடிக்கடி கொட்டும்.. உடலில் இரும்புச்சத்து இல்லையென்றாலும் முடி உதிரும்.. அதிக வெள்ளைப்போக்கு, ஒழுங்கற்ற ரத்த போக்கு, மகப்பேறு காலங்களுக்கு பிறகு ஏற்படும் ரத்த இழப்புகளாலும் முடி கொட்டும்.. அதேபோல, பொடுகு தொல்லை, அதிக மன உளைச்சல், போதுமான அளவு தூக்கமின்மை, உடலில் சூடு அதிகமாகுதல் போன்றவைகளும் காரணமாக உள்ளன.

சத்தான உணவு, முறையான தூக்கம், போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது இவையெல்லாம்தான், இதற்கு ஒரே தீர்வு என்பதை மறுக்க முடியாது.. அந்தவகையில், முருங்கைகீரையைவிட நன்மை தரக்கூடிய கீரைகள் வேறு இருக்க முடியாது.
கருவேப்பிலை: இந்த கீரையின் பொடியையும், கருவேப்பிலை பொடியையும் சமமாக எடுத்து, ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். பிறகு, ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும். இப்படியே 6 மாதம் செய்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடுவதுடன், தலைமுடியும் அடர்த்தியாக வளருமாம். வெறுமனே, முருங்கையிலையில் சூப் போல செய்து சாப்பிடலாம்.. கறிவேப்பிலையை துவையலாக பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய்கள்: கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கழுவி, இரவெல்லாம் ஊறவிட வேண்டும். மறுநாள் காலையில், இதனுடன் 3 நெல்லிக்காய்களை விதை நீக்கி சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அந்த விழுதினை மெல்லிய துணியில் வடிகட்டி, அந்த சாற்றினை விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தாலே முடி கொட்டுவது நின்றுவிடும்.
அவுரி இலை: ஒருவேளை உங்கள் தலைமுடி கருப்பாக மாற வேண்டுமானால், அவுரி இலைகளை வைத்து வீட்டிலேயே பொடி ஒன்றை தயாரிக்கலாம். அதாவது, மருதாணி, நெல்லிமுள்ளி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை இந்த நான்கையும் சும அளவு எடுத்து, காயவைத்து பொடித்து கொள்ள வேண்டும். அதேபோல, அவுரி இலையையும் நிழலில் காய வைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது, அவுரி இலை தவிர மற்ற அனைத்து பொருட்களையும், டீ டிக்காஷனில் இரவெல்லாம் ஊறவிட்டு, அதை மறுநாள் காலையில் தலைக்கு தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விடவேண்டும்.
பிறகு, அவுரி இலையை தண்ணீரில் கலந்து, அதையும் தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, இப்போது தலையை அலச வேண்டும். வாரம் ஒருமுறை, பிறகு மாதம் 2 முறை, பிறகு 2 மாதம் ஒருமுறை என இப்படி செய்து வந்தால், முடி நிறம் கருமையாக மாற தொடங்கும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications