Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லிக்காய் சூப்பர்.. தினம் ஒரு நெல்லிக்காய் போதும்.. ஆயுசை கூட்டும் ஆபத்பாந்தவன்.. ஆச்சரிய நெல்லி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லிக்காய்கள் மனித குலத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்ந்து வருகிறது. அதேசமயம், நெல்லிக்காயை அதிகமாக சாப்பிடலாமா? நெல்லிக்காய்களால் ஏதாவது உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளதா?

வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. ஆனால், வைட்டமின் C சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.. நெல்லிக்காயில் 600 மில்லி அளவுக்கு வைட்டமின் C உள்ளதாம். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய். தினம் ஒன்று சாப்பிட்டாலே போதும், எந்த நோயும் நம்மை அண்டாது.

Do you know Excellent Health Benefits of Gooseberry and Amla Nellikkai is the Super Fruit for all


ஆஸ்துமா: ஆஸ்துமாவுக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து என்றே சொல்லலாம்.. நெல்லிச் சாற்றில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா நீங்கும்.. ஆன்டிஆக்ஸிடென்ட் அடங்கியுள்ள காய் என்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை துவக்கத்திலேயே விரட்டிவிடும்.

ரத்த சோகை உள்ளவர்கள், உடனடியாக இந்த இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.. ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, தலைமுடி உதிர்வு இருக்காது.. அதனால்தான் தலைமுடிக்கு தயாராகும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நெல்லிக்காய்: அல்லது நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்தல் பிரச்சனை குறைந்து, முடியும் வளர்ச்சி பெறும்.. அதைவிட முக்கியமாக, கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் நரைமுடியை தடுக்கும் குணம் இந்த நெல்லிக்காய்களுக்கு உண்டு.. பொடுகு தொல்லையும் நீங்கிவிடும்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டுவந்தால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்த பிரச்சனைகளுக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று நெல்லிக்காய்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தை பெற்றுத்தரும்

நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து நிறைந்த இந்த நெல்லிக்காய், மலச்சிக்கலை போக்குகிறது. மலச்சிக்கல் மட்டுமல்லாமல், அசிடிட்டி, அல்சர், போன்றவற்றை விரட்டி, உடலிலுள்ள செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதே கிடையாது. உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சலை தீர்க்கும் திறன் இந்த நெல்லிக்காய்களுக்கு உண்டு. மூட்டு வலி, முழங்கால் வலி, போன்ற பிரச்சனைகளையும் நெல்லிக்காய்கள் சரிசெய்கிறது என்றால், அதற்கு காரணம், நெல்லிக்காயில் ப்ரோ அபோப்டோசிஸ் என்ற பண்புகள்தான்.

உடல் எடை: உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த நெல்லிக்காயை தவறவிடக்கூடாது.. இதயத்திற்கு நல்லதை மட்டும் இந்த நெல்லிக்காய், உடலில் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றக்கூடியது.. ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதால், ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருப்பதுடன், ரத்த நாளங்கள், தமனிகளை சீராக வைத்திருக்க முடியும்..

வயதான தோற்றத்தை தள்ளிப்போடுகிறது இந்த நெல்லிக்காய்.. இதன் சாறு எடுத்து, தேனை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால், சரும பாதுகாப்பு கிடைப்பதுடன் சருமமும் ஜொலிக்கும்.

குளிர்காலம்: இந்த நெல்லிக்காய்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.. காரணம், குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் அதிகமாகி கடுமையான பாதிப்பை தந்துவிடலாம்.. உயர் ரத்த அழுத்தமும், சுவாச பிரச்சினையும் ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் கைகொடுத்து உதவுவது இந்த நெல்லிக்காய்கள்தான்.

இப்படி பல நன்மைகளை தரும் இந்த நெல்லிக்காயை, சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.. காரணம், கால்சியம் ஆக்ஸைடு அதிகம் இந்த நெல்லிக்காயில் உள்ளதால், தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

நன்மைகள்: அதேபோல, குறைந்த அளவு ரத்தத்தில் சர்க்கரை உள்ளவர்களும், நெல்லிக்காயை தவிர்க்கலாம். ஒருசிலருக்கு நெல்லிக்காய் அதிகமாக சாப்பிட்டால், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வரலாம் என்பதால், அளவுடன் சாப்பிடுவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+