மட்டன் எடுக்கறீங்களா.. ஆட்டுக்கறி வாங்கினால் "இதை" கேட்டு வாங்குங்க.. கொழு கொழு கொழுப்பின் அபார ருசி
சென்னை: ஆட்டிறைச்சியை பொறுத்தவரை, அதன் ஒவ்வொரு உறுப்புகளும், நம்முடைய உடலுக்கு மிகுந்த நன்மையை தரக்கூடியது.. அதனால்தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில், மட்டன் கொழுப்புகளில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.. சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.

ஆரோக்கியம்: ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..
ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய பார்வையை கூர்மைப்படுத்தக்கூடியது.. கபம், சளி, இருமல், நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்கள் நெஞ்செலும்பாக சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது..
கிட்னிகள்: ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. ஆட்டின் குடல் எனப்படும் போட்டி செரிமானக் கோளாறுகளை சீர்செய்யக்கூடியது.
மட்டன் கொழுப்பு: ஆட்டு கொழுப்புகளை எடுத்துக் கொண்டால், அபார ருசியை தரக்கூடியது. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள்.. ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்தே குழம்புகள், பிரியாணிகள் தயாராகும்.
இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
கொழுப்பு கிரேவி: இந்த கொழுப்பை வறுத்தும் சாப்பிடலாம் அல்லது கிரேவி போலவும் தயாரித்து சாப்பிடலாம்.. சிறு சிறு துண்டுகளாக கொழுப்புகளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். வாணலில் சிறிதளவு மட்டுமே எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த கொழுப்பிலிருந்தே நிறைய எண்ணெய்கள் பிரியும் என்பதால், மிகமிக குறைவான அளவுக்கே எண்ணெய்யை தாளிப்புக்கு ஊற்றிக்கொள்ளலாம்.
அதில், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொழுப்பையும் சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். இடப்போது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 15 அல்லது 20 நிமிடம் வேகவிட வேண்டும். இதை இட்லி, தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டால் ருசியாக இருக்கும்.
கொழுப்புகள்: அல்லது ஆட்டு கொழுப்புகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு, தோசைக்கல்லில் போட்டு, லேசாக உப்பு மட்டுமே சேர்த்து வெறுமனே பிரட்டி எடுக்கலாம். இது இன்னும் ருசியாக இருக்கும். அல்லது மிளகு ரசம் வைத்தால், அதில் இந்த கொழுப்புகளை சேர்த்தால் கூடுதல் டேஸ்ட் கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications