பொட்டுக்கடலை.. பட்டு பட்டுனு நோயை விரட்டியடிக்கும் பொட்டுக்கடலை.. நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடலாமா
சென்னை: பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது பொட்டுக்கடலை என்றே சொல்லலாம்.. இந்த பொட்டுக்கடலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?
கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை, என்று பல பெயர்களில் அழைத்து வருகிறோம்.. வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன.. பெண்கள் + குழந்தைகள் + நீரிழிவு நோயாளிகள் + உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் + கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினருக்குமே இந்த பொட்டுக்கடலை தரும் நன்மைகள் ஏராளம்.

பெண்கள்: மிக மிக குறைந்த அளவு கலோரிகளை கொண்டது பொட்டுக்கடலை.. ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் கொட்டிக்கிடக்கும் உணவாகும்.. பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சீரான உணவாக இந்த பொட்டுக்கடலை உள்ளதென்றால் அதற்கு காரணம், இதில் நிறைந்திருக்கும் புரோட்டீன்கள்தான்.
100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் மட்டுமே உள்ளன.. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சாய்ஸ் இந்த பொட்டுக்கடலை. என்சிபிஐ ஆய்வு அறிக்கையில், இது நிரூபணமாகி உள்ளது..
ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பின உணர்வு தரும்.. பசி எடுக்காது.. செரிமான பிரச்சனைகளையும் பொட்டுக்கடலை சரி செய்கிறது.. இதனால் குடல் பாதுகாப்பும் பராமரிக்கப்படுகிறது.. கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன.. உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற முடியும். குறைந்த கலோரியில் நிறைந்த புரோட்டீன் உணவாக உள்ளது..
நரம்புகள்: சர்க்கரை நோயாளிகள், எதை சாப்பிடுவது என்ற சிக்கல் உள்ளபோது, இந்த வறுத்த பொட்டுக்கடலை அதற்கு உதவுகிறது.. காரணம், குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை இந்த கடலை சீராக்குகிறது.. இதிலுள்ள வைட்டமின் சத்துகள், எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகின்றன..
வறுத்த பொட்டுக்கடலை இன்னும் நன்மை தரக்கூடியது.. இதிலுள்ள பாஸ்பரஸ் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.அத்துடன், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற குறைபாடுகளை தடுக்கவும் இந்த பொட்டுக்கடலை தூண்டுகோலாகிறது.. இதயத்தை ஆரோக்கிமாக வைத்து கொள்ள உதவுகிறது. கெட்ட கொழுப்பையும் இந்த கடலை தடுத்துவிடுவதால், இதய நோய்கள் அபாயமும் குறைகிறது..
குழந்தைகள்: பல ஊட்டச்சத்து உள்ளதால்தான், குழந்தைகளுக்கு தயாராகும் சத்துமாவில் இந்த பொட்டுக்கடலை தவறாமல் இடம்பெற்று வருகிறது.. பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், தேவையான வைட்டமின்கள் அவர்களுக்கு கிடைக்கும்..
மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும் என்பார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
கர்ப்பிணிகள்: கர்ப்பிணி பெண்கள், சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.. வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது.. ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பெண்களின் நாட்களில் ஏற்படும் அதிக மாதவிடாய் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தலாம்.
முகத்திற்கு அழகும் பொலிவும் தருகிறது இந்த பொட்டுக்கடலை.. சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகிறது.. இதனால், படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்பட்டுவிடுகின்றன..
வலுவான தலைமுடி: அதேபோல, தலைமுடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், இந்த பொட்டுக்கடலை அதற்கும் தூண்டுகோலாகின்றன.. அத்துடன், இளநரை பிரச்சனையும் நீங்கிவிடுகிறது. உடல் மெலிந்து உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்கள், இந்த பொட்டுக்கடலை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications